Thursday, June 26, 2014

கண்ணாடியில் கவனம்! ( பெண்களுக்கு )

  வெளியிடங்களுக்கு சென்று ஆடை மாற்றும்போது,  அந்த இடத்தில் கண்ணாடி இருந்தால் அது சாதாரண கண்ணாடிதானா என்று பரிசோதித்த பிறகே ஆடையை மாற்ற வேண்டும்.  சாதாரண கண்ணாடியாக இருந்தால்,  முன் பக்கம் நமக்கு தெரியும்.  பின் பக்கம் ஒன்றும் தெரியாது.  ஆனால், இருபுறமும் காட்டும் கண்ணாடியும் இருக்கிறது.  முன்புறத்தில் உங்களுக்கு நீங்கள் மட்டுமே தெரிவீர்கள்.  உங்களுக்குத் தெரியாமல் கண்னாடியின் மறுபுறம் நின்று உங்களை ஒருவர் பார்க்க வாய்ப்புண்டு.  அதை தெரிந்து கொள்ளவும் ஒரு எளியமுறை இருக்கிறது.
     உங்கள் விரலின் நுனிப்பகுதியை கண்னாடியின் மேல் வையுங்கள்.  உங்களுடைய விரலுக்கும்,  கண்னாடியில் தெரியும் பிம்பத்தின் விரலுக்கும் இடையே இடைவெளி இருக்கவேண்டும்.  அப்படி இருந்தால் அது வில்லங்கம் இல்லாத கண்ணாடி.
     மாறாக,  உங்களுடைய விரலும் ,  கண்ணாடியில் விழும் பிம்பத்தின் விரலும் நேரடியாக தொட்டுக் கொள்வது போல் இருந்தால்,  அந்தக் கண்ணாடியின் பின்னால் விபரீதம் இருக்கிறது என்று புரிந்துகொள்ளூங்கள்.  அது டூ வே கண்ணாடி.  அதாவது,  மறுபுறம் உங்களை யாரோ பார்த்தில் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம்.
     ரெடிமேட் ஆடைகளை வாங்கும்போது,  சரியாக இருக்கிறதா என்று டிரையல் ரூமிற்கு சென்று அதை அணிந்து பார்ப்போம்.  ஒருவேளை இந்த அறையினுள் வக்கிரக் கண்கள் ஒளிந்திருந்தால் அதை கண்டுபிக்க சுலபமான வழிமுறை இருக்கிறது.
     டிரையல் ரூமிற்கு உள்ளே செல்லும் முன்,  அந்த அறையின் வாசலில் இருந்து உங்கள் செல் மூலம் யாருக்காவது போன் செய்து பேசுங்கள்.  பிறகு டிரையல் ரூமிற்கு சென்றதும்,  மீண்டும் ஒரு முறை போன் செய்து பேசுங்கள்.  அப்போது உங்கள் செல்போனில் இருந்து ' கால் ' போனால் அந்த அறையில் ஒரு பிரச்சனையும் இல்லை.  ' கால் ' போகாமல் இருந்தால் அங்கு கேமரா இருக்கிறது என்று அர்த்தம்.
-- ஹரிணி.
--  தினமலர். பெண்கள் மலர். 14- 9 -2013.

No comments: