Monday, August 17, 2015

யாசர் அராபத்

   யாசர் அராபத்துக்கு விஷம்?
     பாரீஸ் :  பாலஸ்தீனத் தலைவர் யாசர் அராபத் விஷம் வைக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலிவடைந்துள்ளது.
     அராபத்தின் உள்ளாடை, தலைப்பாகை, டூத் பிரஷ், ஆஸ்பத்திரியில் அவர் பயன்படுத்திய துணிகள் உள்ளிட்டவற்றை ஸ்விட்சர்லந்தின் லாவ்சேனில் உள்ள கதிரியக்க இயற்பியல் துறை மற்றும் சட்ட மருத்துவ பல்கலைக்கழக மையத்தில் 8 விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.
     அதில்,  போலோனியம் 210 என்ற கதிரியக்கப் பொருள் இருப்பதை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.  அவரின் உடலின் எஞ்சிய பாகங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலும் போலோனியம் இருந்ததாகத் தெரியவந்துள்ளது.  எனினும்,  அராபத் விஷம் வைத்துக் கொல்லப்பட்டார் என்பது தொடர்பாக அதிகாரப்பூர்வமான இறுதி முடிவு எதுவும் அறிவிக்கப்படவில்லை.
      அராபத், 2004-ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி பிரான்ஸில் உயிரிழந்தார்.  அப்போது அவருக்கு வயது 75.  அப்போது அவர் இறந்ததற்கான காரணத்தை மருத்துவர்களால் கண்டறிய முடியவில்லை.  அவரின் மனைவியின் வேண்டுகோளை ஏற்று, பிரேதப் பரிசோதனையும் நடத்தப்படவில்லை.
      அவர் விஷம் வைத்துக்கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் 2012 ம் ஆண்டு ஊடகங்களில் செய்தி வெளியானது.  இதையடுத்து 2012 ம் ஆண்டு நவம்பரில் அராபத்தின் உடல் தோண்டி யெடுக்கப்பட்டு ,  உடைகள், எஞ்சிய உடல் பாகங்கள் சேகரிக்கப்பட்டன.  அதை பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து, ரஷ்யாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தனித்தனியே ஆய்வு செய்து வருகின்றனர்.
-- பி.டி.இ.  சர்வதேசம்.
--  ' தி இந்து ' . புதன், அக்டோபர் 16,2013. 

No comments: