Thursday, August 6, 2015

சுட்டது நெட்டளவு.

 இறந்த பின் ஒரு மனிதன் சொர்க்கத்திற்கு சென்றான்.  சொர்க்கத்தின் வாசலில் ஒரு பெரிய சுவரில் பல கடிகாரங்கள் தொங்கிக்கொண்டிருந்தன .  இது
 எதற்கு என்று அங்கிருந்த காவலாளி ஒருவரிடம் கேட்டான்.
     அதற்கு அந்த காவலாளி இது ஒரு " பொய் கடிகாரம்.  அதாவது பூமியில் நீங்கள் ஒரு பொய் சொன்னால் உங்களூகுரிய கடிகாரத்திலுள்ள முள் ஒரு தடவை நகரும்.  இங்கே பாருங்கள் " என்று ஒரு கடிகாரத்தை காட்டினான்.
    " இது அன்னை தெரசாவிற்குரியது.  இதுவரை இந்த கடிகாரத்தின் முள் நகரவேயில்லை.  அதாவது அன்னை தெரசா இதுவரை போய் எதுவும் சொன்னதில்லை என்று அர்த்தம் " என்று விளக்கமளித்தான்.  இவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது.  மேலும் இன்னுமொரு கடிகாரத்தை காட்டி, இது ஆபிரகாம் லிங்கனுடையது. இந்த கடிகாரத்தின் முள் இதுவரை இருமுறை நகர்ந்துள்ளது.  அதாவது ஆபிரகாம் லிங்கன் தம் வாழ்க்கையில் இருமுறை பொய் சொல்லியுள்ளார்" என்றும் விளக்கமளித்தான்.
     இதைக் கேட்ட அந்த மனிதனுக்கு ஆச்சரியமாக இருந்தது.  உடனே அந்த மனிதன், " எங்கள் ஊரிலுள்ள அரசியல்வாதிகளின் கடிகாரங்கள் எங்கே உள்ளன, நான் பார்க்க வேண்டும் " என்று கேட்டான்.
     அதற்கு அந்த காவலாளி, " மன்னிக்கணும்... அந்த கடிகாரங்கள் அனைத்தையும் இங்கே நாங்கள் மின் விசிரியாக உபயோகித்து வருகிறோம் " என்றான்.
-- பி.ஆறுமுகநயினார்.  ரிலாக்ஸ்.
--   ' தி இந்து ' நாளிதழ்.வியாழன், அக்டோபர் 3, 2013. 

No comments: