( சிறப்பு )
பையில் வைத்து எடுத்துச் செல்லும் அளவுக்கு ஒரு காரைக் கண்டுபிடித்திருக்கிறார் ஜப்பானைச் சேர்ந்த என்சினியர் குனைகோ சைட்டோ. இது அமர்ந்து செல்லும் கார் அல்ல. நின்றுகொண்டே பயணிக்கும் கார். இதற்கு 'வாக் கார்' என்று பெயரிட்டிருக்கிறார். லேப்டாப் அளவுக்கு இருக்கிறது இந்த வாக் கார். ஸ்கேட் போர்ட் போலவே வேலை செய்கிறது. ஆனால் இதன் மீது நின்றுகொண்டே நாம் எந்த விசையையும் செலுத்த வேண்டியதில்லை. மிக வேகமாக பயணிக்கலாம். படிகள் குறுக்கிட்டால், வாக் கார் நின்றுவிடும். மீண்டும் சமதளத்தில் வைத்தால் வேகமாக ஓட ஆரம்பித்துவிடும். இறக்கத்தில் மட்டுமல்ல, செங்குத்தான இடங்களில் ஏறிச்செல்லவும் முடியும். எந்தப் பகுதியில் திரும்ப வேண்டுமோ, அந்தப் பகுதியை நோக்கி உடல் எடையை அழுத்தினால் போதும். தானாக சென்றுவிடும். கோகோ மோட்டார்ஸ் நிறுவனம் இவருடன் கைகோர்த்திருக்கிறது. வாக் காரை இன்னும் எப்படியெல்லாம் மேம்படுத்த முடியும் என்பதை ஆய்வு செய்துவருகிறார்கள். லித்தியம் பேட்டரிகளால் இந்த வாக் காருக்கு வேண்டிய சக்தி கிடைக்கிறது. 3 மணி நேரம் சார்ஜ் செய்தால், 7.4 மைல் தூரம் செல்ல முடியும். 120 கிலோ எடையைத் தாங்கக் கூடியது. வாக் காரில் நின்றுகொண்டு எடை சுமந்த டிராலிகள், சக்கர வண்டிகள் போன்றவற்றை கைகளால் பிடித்துக்கொண்டால், எளிதில் அவற்றையும் எடுத்துச் சென்றுவிடலாம் என்பது கூடுதல் சிறப்பு. இந்த ஆண்டு அக்டோபரில் இருந்து முன்பதிவு செய்யலாம். ஒரு வாக் காரின் விலை சுமார் 50 ஆயிரம் ரூபாய். - நம்ம சாலைகளுக்கு இந்த காரை யோசிக்கவே முடியாது ...
-- உலக மசாலா. ( சர்வதேசம் ).
--'தி இந்து' நாளிதழ். வெள்ளி, ஆகஸ்ட் 14, 2015.

No comments:
Post a Comment