Saturday, August 22, 2015

சூரியக் கடிகாரம்.

  18 -ம் நூற்றாண்டில் வான் ஆராய்ச்சித் தகவல்களைச் சேகரிக்க ஜெய்ப்பூரில் பல கட்டடங்கள் அமைக்கப்பட்டன.  அவற்றில் ஒன்றுதான் சாம்ராட் இயந்திரம் எனப்படும் மிகப் பெரிய சூரியக் கடிகாரம்.  புது டில்லியில் " ஜந்தர் மந்தர் " என்று அழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ள வான் ஆராய்ச்சி மையமும் இப்படிப்பட்ட ஒன்றே.
     பூமிப் பந்து 22 அரை டிகிரி சாய்ந்து இருப்பதால் நிலநடுக்கோடு,  நிலநடுக்கோட்டுக்குத் தெற்கேயுள்ள வெப்பமண்டலப் பகுதிகளில் பகல் முழுக்க நல்ல வெளிச்சம் கிடைக்கிறது.  இதன் காரணமாக நம்மைப் போன்றவர்களுக்கு இயல்பாகவே தோல் கறுத்து விடுகிறது அல்லது மாநிறத்தில் உள்ளது. இது பல்வேறு தோல் நோய்களை அண்டவிடாதவாறு செய்கிறது.  அதேநேரம் மேற்கு நாடுகளில் பகலில்கூடச் சூரியன் தோன்றாத ஊர்கள் உண்டு.  அண்டார்டிக்காவில் ஆறு மாதம் பகல், ஆறு மாதம் இரவு என்றிருக்கும்.  அதனுடன் ஒப்பிடும்போது பகலில் நமக்குக் கிடைக்கும் சூரிய வெளிச்சம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.  அதன் மூலமே நமது உற்பத்தி நடவடிக்கைகளில் பெறும்பாலானவை நடக்கின்றன.
     இப்படிச் சூரியன் எவ்வளவோ நன்மைகளை நமக்கு வழங்கிவந்தாலும், சக்திமிக்கதாக இருந்தாலும், அதுவும் ஒருநாள் அழியப் போகிறது தெரியுமா?
     சூரியப் பந்துக்குள் உள்ள ஹீலியம் வாயு தொடர்ந்து எரிவதால்தான் இவ்வளவு வெளிச்சமும், வெப்பமும் நமக்குக் கிடைக்கின்றன.  ஹீலியம் வாயு தீர்ந்து போய் சூரியன் அழியலாம் என்கிறார்கள் ஒரு தரப்பு விஞ்ஞானிகள்.  மற்றொரு தரப்பினரோ சூரியன் வெடித்துச் சிதறிப் பூமியைப் பாதிக்கலாம் என்கிறார்கள்.  ஆனால், இது குறித்து இப்போது நாம் கவலைப்பட வேண்டியதில்லை.  இதெல்லாம் குறைந்த பட்சம் 50 கோடி ஆண்டுகளுக்குப் பிறகுதான் நடக்க வாய்ப்பு உண்டாம்.
-- ஆதி வள்ளியப்பன்.  பொது அறிவு . வெற்றிக்கொடி.
--  ' தி இந்து ' நாளிதழ். திங்கள், டிசம்பர் 16, 2013. 

No comments: