Sunday, April 4, 2010

படிகள் !

தத்துவம் சொல்லும் படிகள் !
ஐயப்பன் சந்நிதானத்தில் உள்ள பதினெட்டு படிகள் மிகவும் விஷேஷமானவை . இந்த பதினெட்டு படிகளும் ஒரே கல்லால் ஆனவை . பல வழிகள் ஒருங்கிணைந்து ஒரே லட்சிய ஈடுபாட்டில் மனிதனைச் செலுத்தும் தன்மையை இது வெளிப்படுத்துகிறது . ஐயப்பனை பூஜிப்பது போல பதினெட்டு படிகளையும் பூஜிக்கும் பழக்கம் சபரிமலையில் உண்டு . இதற்குப் ' படி பூஜை ' என்று பெயர் . சென்ற நூற்றாண்டுகளில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடந்த இந்தப் பூஜை இப்போது அடிக்கடி நடைபெறுகிறது .
இந்து மதத்தில் பதினெட்டு என்ற எண்ணுக்கு முக்கியத்துவம் அதிகம் . இந்த பதினெட்டுப் படிக்கட்டுகள் பதினெட்டு தத்துவங்களைக் குறிக்கிறது .
சபரிமலையின் பதினெட்டுப் படிகளில் ஒவ்வொன்றுக்கும் ஒரு தத்துவம் இருக்கிறது . காண்பது , கேட்பது , மணம் , ரசனை , ஸ்பரிசம் என்னும் புலன்கள் -- ஐந்து . காமம் , ஆசை , குரோதம் , லோபம் , மோகம் , மதம் , மாச்சர்யம் , தான் என்னும் அகந்தை ஆகிய அராகங்கள் -- எட்டு . ரரோஜ குணம் ( ராட்சஸ ) , தமோகுணம் ( மந்தம் ) , சாத்வீகம் ( தெய்வீகம் ) என்ற குணங்கள் -- மூன்று . வித்யை ( அறிவு நிலை ) , அவித்தைய ( அறியாமை ) என்பன இரண்டு என்பவை அவை .
சபரிமலையைச் சுற்றி 17 மலைகள் இருக்கின்றன .சபரி மலையையும் சேர்த்து 18 மலைகளை 18 படிகல் குறிக்கின்றன என்ற ஒரு கருத்தும் உண்டு . பொன்னம்பல மேடு , கவுதென்மலை , நாகமலை , சுந்தரமலை , சிற்றம்பல மலை , கல்கி மலை , மாதங்க மலை , மயிலாடும் மேடு , ஸ்ரீபாத மலை , தேவர் மலை , நீலக்கல் மலை , தாலப்பாற மலை , நீலி மலை , கரி மலை , புதுச்சேரி மலை , காளக்கெட்டி மலை , இஞ்சிப்பாறை மலை , சபரிமலை என்பவை அந்தப் பதினெட்டு மலைகள் .
இந்தப் பதினெட்டு மலைகலைத் தாண்டிச் சென்றால் சாஸ்தாவின் தரிசனம் பெறலாம் . 18 தத்துவங்களைக் கடந்தால் சந்நிதானத்தின் திருவருள் பெறலாம் என்பதே 18ம் படியின் தத்துவம் .
--- தினமலர் . பக்தி மலர் . நவம்பர் 12 , 2009 .

No comments: