Tuesday, April 6, 2010

உங்களுக்குத் தெரியுமா ? வைரமுத்து !

உங்களுக்குத் தெரியுமா ?
உங்களுக்கு ஒன்று தெரியுமா ? மாவீரன் நெப்போலியன் , ஜூலியஸ் சீஸர் , ஹனிபால் , பதினான்காம் லூயி ... இன்னும் பல மாவீரர்கள் எல்லாம் பிறக்கும்போதே பற்களுடன் பிறந்தவர்கள் .
--- ஆனந்தவிகடன் . 26 . 09. 1999 .
வைரமுத்து !
கள்ளிக்காட்டு இதிகாசத்தின் 5 பிரதிகளை வாட்டர் ஃப்ரூப் செய்து வைகை அணை நீரில் வீசி எறிந்திருக்கிறார் வைரமுத்து . நாளை அணையே தூர்ந்துபோனாலும் , அந்த மண்ணின் ஆவணமாக அது இருக்குமாம் .
பச்சையப்பன் கல்லூரி மாணவராக இருந்தபோது வெளியிட்ட ' வைகறை மேகங்கள் ' என்ற முதல் கவிதைத் தொகுதி , இவர் மாணவராக இருந்தபோதே ஒரு மகளிர் கல்லூரியில் பாடமாக இருக்கும் பெருமை பெற்றதாம் . இப்போது விற்பனையாகிக்கொண்டு இருப்பது வைகறை மேகங்களின் 29 -ம் பதிப்பு .
' அமெரிக்கன் லைப்ரரி ஆஃப் காங்கிரஸ் ' இவரது கவிதைகளை , இவரது குரலில் ஒலிப்பதிவு செய்து , உலக இலக்கிய ஆவணங்களில் ஒன்றாக வாஷிங்க்டன் டி. சி- யில் பாதுகாத்து வருகிறது .
கனடா நாட்டு அரசாங்கத்தோடு இணைந்து ஒரு தமிழ் அமைப்பு , இவர் உருவம் பொறித்த சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளது . இவரது அஞ்சல் தலை ஒட்டப்பட்டு , இவருக்கு வந்த தபாலை இவரே பிரித்தார் .
--- ஆனந்தவிகடன் , 18 . 11 . 2009 .

No comments: