Monday, April 26, 2010

சமையல் கேஸ் சிலிண்டர் .

வீட்டிற்கு சப்ளை செய்யப்படும் சிலிண்டர்கள் லீக் இல்லாமல் இருக்கிறதா ? நன்கு சீல் செய்யப்பட்டிருக்கிறதா ? என்பதுடன் சிலிண்டர்கள் உபயோகப்படுத்துவதற்கான காலவரம்புக்குள் இருக்கிறதா ? என்பதைப் பார்ப்பது அவசியம் .
நாம் பயன்படுத்தும் சிலிண்டர்களுக்கு ' இவ்வளவு காலத்திற்குத்தான் அதைப் பயன்படுத்தலாம் ' என்கிற வரையறையுள்ளது . ஒரு வருஷத்தை நான்கு குவார்ட்டர்களாகப் பிரித்து அதற்கு ' A' , ' B ' , ' C ' , ' D ' என குறியீடு வழங்கப்பட்டுள்ளது . ' A ' என்றால் ஜனவரி முதல் மார்ச் வரை , ' B ' என்றால் ஏப்ரல் முதல் ஜூன் வரை , ' C ' என்றால் ஜூலை முதல் செப்டம்பர் வரை , ' D ' என்றால் அக்டோபர் முதல் டிசம்பர் வரை பயன்படுத்தலாம் என்பது அந்தக் குறியீட்டின் அர்த்தம் .
' A ' என்ற குறியீட்டுடன் வருஷத்தையும் சேர்த்து ' A09 ' என்று அந்த சிலிண்டரில் குறிப்பிடப்பட்டிருந்தால் 2009 -ம் வருடம் மார்ச் மாதம் வரை அந்த சிலிண்டர் பாதுகாப்பானது என்பது பொருள் .
சரி ; இந்தக் குறியீடு சிலிண்டரில் எங்கே காணப்படும் ?
சிலிண்டரின் மேற்புறம் உள்ள வளையம் , ஸ்டீல் போன்று மூன்று கால்கள் மீது இணைக்கப்பட்டிருக்கும் . அந்தக் கால்களின் உட்புறம் A09 , B09 , C09 , D09 என்று இந்த நான்கில் ஒரு குறியீட்டை பெயிண்டினால் எழுதியிருப்பார்கள் .தற்சமயம் உங்கள் கிச்சனில் உள்ள சிலிண்டரில் D09 என்று இருந்தால் நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம் !
--- இளையரவி . தகவல் தமயந்தி . குமுதம் 02 . 12 . 2009 .

No comments: