ஒரு ஆங்கில நகைச்சுவைத் துணுக்கு...
ஒரு பணக்கார கஞ்சன், தன் மரணத்தறுவாயில் மனைவியை அழைத்து " என்னைப் புதைக்கும் போது நிர்வாணமாகப் புதைத்து விடு... கவனம்... அத்தனை விலை கூடிய கோட் சூட்டுடன் பிணத்தை மண்ணில் புதைக்கும் மடத்தனத்தைச் செய்யாதே " என்றான் . தலையில் அடித்துக் கொண்டாள் மனைவி . " உங்களுக்குக் குளிருமே...மேலும் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்..." என்றாள் . " உளராதே... எப்படியும் நரகம்தான் போவேன்... அங்கு நெருப்பில் குளிறாது " என்று சத்தியம் வாங்கிக்கொண்டு இறந்தான் . தலை எழுத்தே என்று நிர்வாணமாகப் புதைத்தாள் மனைவி .
ஒரு நாள் இரவு நேரம் கண்ணாடி ஜன்னலைத் தட்டும் சத்தம் கேட்டு திடுக்கிட்டாள் . கணவனது ஆவி ஆடிக்கொண்டிருந்தது ... " என் கம்பளி உடைகளைக் கொடு .. நரகத்தில் குளிருகிறது " என்றான் கணவன் . " நரக நெருப்பில் வெப்பமாக இல்லையா ? " என்று ஆச்சரியத்துடன் கெட்டாள் மனைவி . " ம்ஹும்...இப்போது நரகத்திற்கு நிறைய பணக்காரர்கள் வந்துவிட்டார்கள் ... அத்தனை பயலும் சேர்ந்து ஏஸி செய்து விட்டார்கள்... குளிர் தாங்க முடியவில்லை " என்றபடி கம்பளியை உருவிக்கொண்டு கணவன் ஆவி நகர்ந்தது .
கற்பனைதான்... ஆனால் அழகான கற்பனை இது . கஞ்சத்தனம்... நரகம் வரை கஞ்சத்தனம் .
--- 'எப்போதும் சந்தோஷம் ' .என்ற நூலில் , சுகி . சிவம்
---- நூல் உதவி : R. கந்தசாமி , அம்பகரத்தூர்
No comments:
Post a Comment