Wednesday, March 28, 2012

' தீவிர ' வாதிகளுக்கு செக் ...


வந்துடுச்சு நவீன ரேடார் .
தமிழகத்தில் முதல் கட்டமாக சென்னை மெரினாவில் உள்ள கலங்கரை விளக்கத்தின் மீது சமீபத்தில் நவீன ' ரேடார் ' பொருத்தப்பட்டது . இந்த 'ரேடார் ' 30 கி.மீ., தொலைவு கடல் எல்லையைக் கண்காணிக்க முடியும் . அது மட்டுமல்ல அதிக வெப்பம், கனமழை, புயல் காலங்ககளில் கூட 24 மணி நேரமும் தன் கடமையை செவ்வனே நிறைவேற்றும் வல்லமை படைத்தது .
இந்த ' ரேடார் ' கடல் போக்குவரத்தையும் கண்காணிக்கிறது என்பது எஸ்க்ட்ரா பணி . எனவே சரக்கு கப்பலில் ஆயில் கசிவு இருந்தாலோ, கண்டெயினர் கடலில் விழுந்தாலோ இது துல்லியமாக கண்டுபிடித்துவிடும் .
மேலும் எல்லை தாண்டி மீன் பிடிப்பவர்கள், போதைப்பொருள் கடத்தல், ஆயுதங்கள் கடத்தல், தீவிரவாதிகள் ஊடுருவல், நீர்மூழ்கி கப்பல் ஆகியவற்றையும் கண்டறிந்து உடனுக்குடன் கம்யூட்டரில் படங்களை தகவல் மையத்துக்கு அனுப்பிவிடும் . .அந்த வகையில் கடல் பகுதியில் 500 விதமான பொருட்களை கண்டுபிடிக்கும் திறமை கொண்டது இந்த ' ரேடார் '. இது தவிர கடலில் ஏற்படும் சில மாற்றங்களையும் ' மோப்பம் ' பிடித்து முன்னெச்சரிக்கை செய்யும் .
இந்தியாவில் பொருத்தப்படும் ' ரேடார் 'களை அரசுத்துறை நிறுவனமான ' பெல் ' தயாரித்துக் கொடுக்கிறது .
இந்தியாவில் 44 : ஆலப்புழை, கோவளம், கண்ணூர், கொச்சி, விசாகப்பட்டினம் உட்பட 44 கடற்கரை பகுதிகளில் ' ரேடார் ' வைக்கப்பட உள்ளன .
தமிழகத்தில் 8 : சென்னை, தவிர கடலூர், புதுச்சேரி, தூத்துக்குடி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி உட்பட 7 கடலோர பகுதிகளில் 'ரேடார் ' வைக்கப்படுகிறது .
--- தினமலர் . 8 . 1. 2012 .

No comments: