விண்வெளியில் ஒரு வைரச் சுரங்கம் !
முழுவதும் வைரங்களால் ஆன ஒரு கிரகத்தை வானியல் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர் .
இங்கிலாந்தின் செஷயர் பகுதியில் அமைந்துள்ள ஆராய்ச்சி நிலையத்தில் ரேடியோ டெலஸ்கோப் மூலம் நட்சத்திரக கூட்டங்களை இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இத்தாலி நாடுகளின் வானியல் நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர் . இதில், முழுவதும் வைரங்களால் ஆன ஒரு கிரகத்தை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர் .
இது குறித்து ஆஸ்திரேலிய நிபுணர் டாக்டர் மைக்கேல் கீத் கூறியதாவது : ' செர்பென்ஸ் நட்சத்திர கூட்டத்தை ஆராய்ந்தபோது, அதில் பல்சார் எனப்படும் ஒரு குட்டி நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்டது . மிகப் பெரிய நட்சத்திரமாக இருந்த அது சுருங்கி, இப்போது குட்டி நட்சத்திரமாக உருமாறியுள்ளது . எனினும் அது சூரியனைப் போல் ஒன்றரை மடங்கு பெரியது ஆகும் .
அந்த குட்டி நட்சத்திரம் வெளியிடும் ரேடியோ அலைகளை ஆய்வு செய்ததில், அதை ஒரு கிரகம் சுற்றி வருகிறது என்றும் தெரிந்தது . ஒரு காலத்தில் நட்சத்திரமாக இருந்து, வாயுக்கள் வெளியேறியதால் சுருங்கி, கிரகமாக அது மாறியுள்ளது . எனினும், பூமியைப் போல் 5 மடங்கு பெரியது அந்த கிரகம் . அதன் குறுக்களவு 65 ஆயிரம் கி.மீ. ஆகும் . குட்டி நட்சத்திரத்தை 6 லட்சம் கி.மீ. தூரத்தில், 2 மணி 10 நிமிடங்களுக்கு ஒருமுறை கிரகம் சுற்றி வருகிறது .
அந்த கிரகத்தில் கார்பன் மற்றும் ஆக்சிஜன் நிறைந்திருக்கிறது . அதில் இருந்த ஹைட்ரஜன், ஹீலியம் வாயுக்கள் வெளியேறிவிட்டன . இதனால் கிரகம் முழுவதும் கார்பன் படிமங்களால் நிறைந்துள்ளன . எனவே, பூமியைப் போல் 5 மடங்கு பெரிதான கிரகம் முழுவதும் வைரச்சுரங்கமாக இருக்கிறது . பிஎஸ் ஆர்ஜே 1719 -- 1438 என பெயரிடப்பட்டுள்ள குட்டி நட்சத்திரமும், அதன் கிரகமும் 4 ஆயிரம் ஒளியாண்டு தூரத்தில் இருக்கின்றன . ஒளியின் வேகத்தில் பயணம் செய்தால் 4 ஆயிரம் ஆண்டுகளில் வைர கிரகத்தை சென்றடைந்து விடலாம் . இவ்வாறு மைக்கேல் கீத் தெரிவித்தார் .
--- - தினமலர் 27 . 8 . 2011 .
No comments:
Post a Comment