' மைக்ரோவேவ் அவன் ' ( அலை அடுப்பு )
அடுப்பு ஆபத்து ! மிரட்டும் மைக்ரோ வேவ் .
இரண்டாம் உலகப்போரின் போது வீரர்களுக்கு சமைப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த அடுப்பு . காலப்போக்கில் பல்வேறு வடிவங்களில் மாறிவிட்டாலும், மின்காந்த அலைகள்தான் இந்த அடுப்பிற்கு அடிப்படை .
ஆரம்பத்தில் எதிரிகளின் விமானத்தை உளவு பார்க்கும் ' ரேடார் ' தொழில் நுட்பம்தான் இந்த அடுப்பில் பயன்படுத்தப்பட்டது . அப்போது இதன் பெயர் ' ரேடாரேஞ்ச் ! '.
உணவுப் பொருட்களை அடுப்பில் வைத்துச் சூடாக்கும்போது நுண்ணிய குழாய் வழியாக இந்த காந்த அலைகள் ( இஎம்டபிள்யூ ) வெளியேறும் . இந்த அலைகள்தான் உணவை சமைக்கும் . இதன் அளவு 2.45 ஜிகா ஹெட்ஸ் . அதாவது ஒரு ஆஸ்பிரின் மாத்திரை சுற்றளவுக்கு மட்டுமே இருக்கும் . ஆனால் சமைக்கும் திட உணவுப் பொருளின் எடையைப் பொறுத்து இந்த அளவு மாறும் ! உணவை சமைக்கத் துவங்கும் மின்காந்த அலைகள் அதன் அனைத்துப் பாகங்களிலும் சீராக சமைக்காமல், நடுவிலிருந்து தொடங்கி படிப்படியாக நுனிவரை சமைப்பதுதான் உணவின் தரத்தை கேள்விக்குறியாக்குகிறது . இருந்தாலும் இந்த எண்ணம் தவறானது .
அடுப்பின் உள்ளே வைக்கும் உணவுப் பொருட்கள் சூடாவதற்கு காந்தத்தால் செய்யப்பட்ட குழாய்கள்தான் முக்கிய காரணம் . அவற்றை ' பெரீலியம் ஆக்ஸைடு ' என்கிற ரசாயனக் கலவையால் செய்யப்பட்ட ' செராமிக் ' கொண்டு பூசியிருப்பார்கள் . வெப்பம் வெளியேறக் கூடாது என்பதுதான் இதன் நோக்கம் . இந்தப் ' பெரீலியம் ஆக்ஸைடு, உணவுப் பொருளோடு கலந்தால் போச்சு. இதனால் கேன்சர் ஆபத்து உண்டு ' .
பொதுவாக, மைக்ரோவேவ் அடுப்பில் சமைக்கும்போது உணவில் இருக்கும் வைட்டமின் -- பி12 அழிந்து போகும் . உடலுக்குத் தேவையான இந்த வைட்டமின் மட்டுமல்லாமல், கவனிக்காமல் விட்டால் ஒரு கட்டத்தில் விஷமாக மாறிவிடும் ஆபத்தையும் மறுப்பதற்கில்லை .
உலோகத்தால் செய்யப்பட்ட பாத்திரங்களை சமைக்கப் பயன்படுத்த முடியாது . மாறாக அதற்கென்றே ஸ்பெஷலாக செய்யப்பட்ட பிளாஸ்டிக் டப்பாகளை மட்டுமே பயன்படுத்த முடியும் . ஆனா அத்தகைய பிளாஸ்டிக் டப்பாக்கள் தரம் வாய்ந்தவையா என்பதை யோசித்துப் பார்ப்பது அவசியம் . இல்லையேல் ஆபத்துக்கள் அணிவகுப்பது நிச்சயம் !
--- குமுதம் 16 - 11 - 2011.
No comments:
Post a Comment