Wednesday, March 7, 2012

கும்பாபிஷேகம் .

மூலஸ்தானத்தைக் கருவறையிலிருந்து யாக சாலைக்கு சுவாமியை அழைத்து வருவதற்கு ஒரு சாதனமாக இருப்பது கலசமாகும் . இதற்கென ஒரு குடத்தை தெய்வத் திருமேனியாகவே அதாவது சராசரி உடல் போன்று எண்ணி அலங்கரிக்க வேண்டும் என ஆகம நூல்கள் கூறுகின்றன .
குடம், நமது உடலைப் போன்றது . அதன் மீது சுற்றப்படும் முப்புரி நூல், உடலின் நாடி நரம்புகள் . உள்ளே ஊற்றப்படும் புனித நீர், உடலின் உள் உறுப்புகள் மற்றும் ரத்தம் போன்றது . குடத்தின் உள்ளே போடப்படும் நவரத்தினக் கற்கள், தங்கம், வெள்ளி போன்றவை வீரிய சக்தியைக் குறிக்கிறது .
முப்பத்தாறு தர்ப்பைகளை ஒன்றாக முடிந்து குடத்தின் நடுவே வைக்க வேண்டும் . இதை முதுகெலும்பாகவும், மாவிலைக் கொத்தை கழுத்துப் பகுதியாகவும், தேங்காயை முகமாகவும் எண்ணி அவற்றிற்குரிய மந்திரங்களைச் சொல்லி அலங்கரிக்க வேண்டும் .
கும்பாபிஷேகத்தின் யாகசாலை முதற்காலத்திற்கு முன்பாக ' கும்பாலங்காரம் ' என இந்நிகழ்ச்சியை விரிவாகச் செய்வார்கள். எனவே, புனித நீர் என்பது இறைவன் திருமேனியின் உள்ளுறுப்புகள் மற்றும் ரத்தம் போன்றது . இதன் நடுவேதான் இறைவனின் தெய்வசக்தி எனப்படும் உயிர்ச்சக்தியை மூல மந்திரம் சொல்லி ஆவாஹனம் செய்து பூஜிக்க வேண்டும் .
--- தினமலர் இணைப்பு , ஜனவரி 13, 2011 .

No comments: