நாம் பூஜிக்கும் இறைவனின் திருவுருவத்தை இரண்டு விதமாக வைத்து கொள்ளலாம். ஒன்று கருங்கல், உலோகம் போன்றவற்றினால் செய்து நிரந்தரமாக வைத்துக் கொள்வது. மற்றொன்று மஞ்சள்பொடி, சந்தனம், மண், கோமயம் போன்றவற்றினால் திருவுருவம் செய்து பூஜை முடிந்தவுடன் கரைத்துவிடுவது. இதற்கு க்ஷணிக உருவம் என்று பெயர். இப்படிச் செய்வதற்குக் காரணம், எல்லோராலும் நிரந்தரமாக சிலை வைத்து தினமும் வழிபட இயலாது. வீட்டில் சிலை வைத்து பூஜை செய்ய வேண்டும் என்றால் மாமிசம் உண்பது, மாதவிடாய் பெண்கள் வீட்டிற்குள்ளேயே இருப்பது போன்றவை கூடாது. இப்படிப்பட்டவர்கள் கோயிலுக்கு மட்டும் சென்று வழிபடுவது வழக்கில் இருந்தது.
விநாயகர் சதுர்த்தியன்று க்ஷணிக உருவத்தில், அதாவது மண் சிலை விநாயகரை வைத்து வழிபட்டு ஆற்றில் கரைக்கும் வழக்கம் தோன்றியது. காலப்போக்கில் நிரந்தரமாக சிலை வைத்திருப்பவர்கள் கூட அன்றைய தினம் மட்டும் மண் சிலை வழிபடுவதும் வழக்கில் வந்தது. எப்படி இருந்தாலும் மண் சிலை விநாயகரை கரைப்பது என்ற சம்பிரதாயத்தை மாற்ற இயலாது. மெகா சைஸ் மண் சிலைகள் கரைப்பதுதான் பல கோயில்களுக்கு இடமளிக்கிறது.
-- மயிலாடுதுறை. ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார். ( அறிவோம்! தெளிவோம்!)
-- தினமலர்.பக்திமலர். பிப்ரவரி 27, 2014.

No comments:
Post a Comment