சோதிடத்தை நம்புங்கள் அல்லது நம்பாதீர்கள். அது மனம் சார்ந்தது. ஆனால், சோதிடம் அறிவியலின் ஓர் அங்கமா? பல சோதிடர்கள் ஆம் என்கிறார்கள். அதற்கு அவர்களில் பலர் ஐந்து காரணங்களைத் தருகிறார்கள் என்று புகழ்பெற்ற விஞ்ஞானி நர்லிகர் சொல்கிறார்.
1. வானவியலைப் போலவே சோதிடமும் கோள்களை ஆதாரமாகக் கொண்டது. வானவியல், அறிவியலின் அங்கமாக இருக்கும்போதுசோதிடம் ஏன் இருக்கக் கூடாது.
2. சில சோதிடர்களின் கணிப்பு துல்லியமாக இருக்கிறது என்பது உலகறிந்த ஒன்று. எனவே, அவர்களது சோதிடத்தையாவது அறிவியல் என்று ஏன் ஏற்றுக்கொள்ளக் கூடாது.
3. வானிலை மற்றும் மருத்துவத் துறையை எடுத்துக்கொள்ளுவோம், வானிலை அறிவிப்புகள் பொய்த்துப்போகின்றன. மருத்துவரின் சிகிச்சை பலனளிக்காமல் போகிறது. இவற்றை அறிவியலின் அங்கமாக எடுத்துக்கொள்ளும்போது, சோதிடத்தை ஏன் ஏற்றுக்கொள்ளக் கூடாது.
4. சோதிடத்தைச் சரியாகப் படிக்காதவர்கள் சொல்வதூதான் பொய்த்துப்போகிறது. நன்றாகப் படித்தவர்கள் சொல்வது பொய்க்காது. அவர்கள் சொல்வதையாவது அறிவியல் என்று எடுத்துக்கொள்ள வேண்டும். போலிகளை வைத்துக்கொண்டு, இந்தத் துறையையே குறைசொல்ல முடியாது.
5. அறிவியலுக்குக் கொடிபிடிப்பவர்கள் சோதிடத்தைப் படிக்காமலும் சோதனைக்குள்ளாக்காமலும் அகந்தையோடு அதைப் புறந்தள்ளுகிறார்கள்.
--- பி.ஏ.கிருஷ்ணன். கருத்துப் பேழை.
-- 'தி இந்து' நாளிதழ். திங்கள், மார்ச் 3 ,2014

No comments:
Post a Comment