Saturday, February 13, 2016

அக்கினி சொரூபமே கோபுரம்!

கோயில்களின் நுழைவு வாயிலில் இருக்கும் உயர்ந்த கட்டடப் பகுதியைக் கோபுரம் என்று சொல்ல வேண்டும்.  கர்ப்பகிரகம் எனப்படும் கருவறையின் மேற்புறம் உள்ள உயர்ந்த கட்டடப் பகுதியை ஸ்ரீவிமானம் என்று சொல்லவேண்டும்.
     கோபுரம் அல்லது ஸ்ரீவிமானத்தில் இருக்கும் கலசத்தை சிகை ( தலைமுடி ) என்பார்கள்.  இவ்விரண்டும் அக்கினி சொரூபமாக, சிவாம்சமாக சொல்லப்படும்.  கருவறையில் உள்ள தெய்வத்தின் உடலாக - ஸ்தூலலிங்கமாக கோபுரத்தைச் சொல்வார்கள்.  யாக குண்டத்தில் நான்கு பக்கமும் இருக்கும் கல்லுக்கு 'வேசரம்' என்று பெயர்.
     கோபுரத்தின் அடிப்பகுதியில் இருக்கும் கட்டடப்பகுதிக்கும் 'வேசரம்' என்றே பெயர்.  யாகக் குண்டத்தின் நடுவில் யாகாக்னி வளர்கிறது.  அதுபோலவே வேசரம் என்ற கட்டடப் பகுதியின் நடுவில் கோபுரம் அமைகிறது.
     இறைவன் 'தழல்' உருவம் உள்ளவன்.  எனவே இறைவனின் வடிவமான கோபுரமும் 'தீச்சுடர்' என்றே சொல்வார்கள்.
     கோபுரத்தில் அதன் அளவுக்கேற்ப 3,5,7,9 கலசங்கள் இருக்கும்.  இந்த கலசங்களை ஞானச்சுடர் என்று சிற்ப சாஸ்திரங்கள் சொல்கின்றன.  இறைவனின் ஸ்தூலக உருவமான கோபுர தரிசனம் கோடி நன்மைகள் கொடுப்பதாகும்.
-- - தினமலர்.இணைப்பு . பக்திமலர். மார்ச் 27, 2014   

No comments: