இதயத்தைப் பற்றிய முக்கியத் தகவல்கள்:
* கருப்பையில் கரு உருவாகும்போது, முதலில் உருவாகும் உறுப்பு இதயம். இதயத் துடிப்பும் ஆரம்பமாகிறது. இது
பெரிதாகும்போது, நான்கு அறைகளாகப் பிரிகிறது. வளர்ந்த ஒருவரின் இதயம் சராசரியாக 5 அங்குல நீளம், 3 அங்குல அகலம்
இருக்கும்.
* மனித உடலின் தசைகளிலேயே மிக உறுதியானது இதயத் தசை. இதயத் தசைகள் பல ஆயிரக்கணக்கான தசைநார்களால்
உருவாக்கப்பட்டவை. ஆனால், அவை அனைதும் இணைந்து ஒரே தசைநாரைப் போலவே வேலை செய்கின்றன.
* இதயம் சீராக ஒரு நாளைக்கு 1,00,000 முறைக்கு மேல் துடிக்கிறது. அதாவது ஒரு நிமிடத்துக்கு 70 முறை, ஒரு மணிக்கு 4,200
தடவை துடிக்கிறது. இப்படியாக 24 மணி நேரத்தில் 1,00,800 தடவை துடிக்கிறது.
* இதயம் ஒரு நாளில் மனித உடலில் இருக்கும் சுமார் 60,000 மைல் நீள அளவுள்ள ரத்த நாளங்களில் 7,200 லிட்டர் ரத்தத்தைச்
செலுத்துகிறது. அதாவது ஒரு நிமிடத்துக்கு 5 லிட்டர் வீதம், ஒரு மணி நேரத்தில் 300 லிட்டரைச் செலுத்துகிறது. 24 மணி
நேரத்தில் இது 7,200 லிட்டராகிறது.
* ஒரு நிமிடத்துக்குச் சுமார் 5 லிட்டர் ரத்தத்தை இதயம் 'பம்ப்' செய்கிறது. அதாவது ஒரு நாளைக்குச் சுமார் ஒரு லட்சம் தடவை.
* ஒருவர் வேலை செய்யாமல் இளைப்பாறும்போதும் இதயம் ஒரு நிமிடத்துக்கு 45 முதல் 80 முறை வரை ஒரே சீராகத் துடிக்கிறது.
ஆனால், பளுவைத் தூக்கும்போதோ, உடற்பயிற்சி செய்யும்போதோ, ஒரு நிமிடத்துக்கு 4 மடங்கு அதிகமான ரத்தத்தைச்
செலுத்துகிறது.
* ஒரு மனிதனின் சராசரி 70 வயது வாழ்க்கையில், இதயம் கிட்டத்தட்ட 25 கோடி முரை சுருங்கி விரிகிறது.
-- சரஸ்வதி பஞ்சு, அய்யப்பன் நகர், திருச்சி. 21.
-- 'தி இந்து' நாளிதழ். செவ்வாய், பிப்ரவரி 25,2014.

No comments:
Post a Comment