Wednesday, February 17, 2016

எரிபொருள்

சர்க்கரையிலிருந்து எரிபொருள் தயாரிக்க திட்டம்.
  *லண்டன்*
     பிளாஸ்டிக், காஸோலின், ரப்பர் என்று எதையெடுத்தாலும் திரவ எண்ணெயிலிருந்துதான் தயாரிக்கப்படுகின்றன. இப்போது இந்த எண்ணெய்க்கு தட்டுப்பாடு வரத் தொடங்கியிருக்கிறது.  எனவே ரசாயனத் தொழிலில் அதிகம் பயன்படுத்தப்படும் ஐசோபியூடேன் என்ற அடிப்படை வேதியியல் பொருளைத் தயாரிக்க சர்க்கரையைப் பயன்படுத்த அறிவியல் அறிஞர்கள் முடிவு செய்துள்ளனர்.
     எரிபொருள்கள், கரைப்பான்கள் போன்ற பல பொருள்களைத் தயாரிக்க ஐசோபியூடேன்களைத்தான் பயன்படுத்துகின்றனர்.  எண்ணெய்க்குப் பதிலாக சர்க்கரையைப் பயன்படுத்துவதில் உள்ள வசதி, இதை எவ்வளவு வேண்டுமானாலும் தயாரித்துக் கொள்ளலாம் என்பதுதான்.  சர்க்கரை என்றால் கரும்புச் சாறிலிருந்து எடுக்கப்படுவது மட்டுமல்ல, சாதாரண மரங்களிலிருந்தும், வைக்கோலிலிருந்தும்கூட எடுக்கப்படுவது.
     சர்க்கரையிலிருந்து எரிபொருள் தயாரிக்கப்படுவதால் மக்களுக்கு சர்க்கரை கிடைக்காமல் தட்டுப்பாடு வந்துவிடக்கூடாது என்பதற்காக வைக்கோல், மரம் போன்றவற்றிலிருந்தும் சர்க்கரையைத் தயாரிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
-- ஐ.ஏ.என்.எஸ்.  தேசம்.
--  'தி இந்து' நாளிதழ். வியாழன்,மார்ச் 27 ,2014.  

No comments: