சூரியனைச் சுற்றி வரும் ஒன்பது கிரகங்களில் மிகச் சிறியது புதன். ஏற்கனவே சிறியதான புதன் கிரகம், மேலும் சுருங்கி வருவதாகச் சொல்கிறார்கள் நாசா விஞ்ஞானிகள். அதாவது 4 கோடி ஆண்டுகளில் 8.6 மைல் அளவுக்கு அதன் விட்டம் சுருங்கி உள்ளதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. புதன் கிரகம் முழுவதும் பாறைகளால் ஆனது. அதில் 3 மாதம் பகலும் 3 மாதம் இரவும் இருக்கும். புதன் கிரகத்தின் வெயில் பூமியைவிடப் பல மடங்கு அதிகம். 400 டிகிரி செல்சியஸ். அதுபோல இரவில் குளிரும் மிக அதிகம். மைனஸ் 173 டிகிரி. அதன் இந்த இயல்பால் அங்கு உயிரினம் வாழக்கூடிய சூழ்நிலை இல்லை.
-- ஆர்.ஜெயகுமார். விந்தை உலகம். வாழ்வு இனிது.
-- 'தி இந்து' நாளிதழ். சனி,மார்ச் 29,2014.
-- ஆர்.ஜெயகுமார். விந்தை உலகம். வாழ்வு இனிது.
-- 'தி இந்து' நாளிதழ். சனி,மார்ச் 29,2014.
No comments:
Post a Comment