வங்கிக்கணக்கு இல்லாவிட்டாலும் ஏடிஎம்மில் பனம் பெறலாம். ரிசர்வ் வங்கி அதிரடி.
விரைவில், வங்கியில் கணக்கு இல்லையென்றாலும் ஏடிஎம்மில் பணம் எடுக்கலாம். இத்தகைய வசதியை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
வங்கிக்கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர், வங்கிக்கணக்கு இல்லாதவர்களுக்கு பணப்பரிமாற்றம் செய்வதற்கான வசதியை ஏற்படுத்த சமீபத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பணம் அனுப்ப விரும்புவோர் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏடிஎம்முக்கு சென்று தன் கணக்கிலிருந்து குறிப்பிட்ட தொகையை அனுப்ப கோரலாம். பின்னர், வங்கி சார்பில் பனம் பெறுவோரின் செல்போன் எண்ணுக்கு ஒரு குறியீடு அனுப்பிவைக்கப்படும். அந்த குறியீட்டை அவர் அருகில் உள்ள சம்பந்தப்பட்ட வங்கியின் ஏடிஎம்முக்கு சென்று அந்த குறியீடை அழுத்தி பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.
பணம் அனுப்புவதில் ரொக்கம் கைக்கு கிடைப்பது என்பது மிகவும் முக்கியமான ஒன்று. நம்நாட்டில் பணம் பெறுவோர் மிக அதிக அளவில் உள்ளனர். ஆனால், அவர்களில் குறிப்பிட்ட சிலருக்குத்தான் வங்கிக்கணக்கு உள்ளது. இதனால் இந்த ஏற்பாடு.
இதுபோன்ற புதுமையான முறையில் பணப்பரிமாற்ற சேவையை அளிக்கும் முயற்சியில் செல்போன் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
-- தினமலர். வியாழன் . பிப்ரவரி .13. 2014.

No comments:
Post a Comment