Sunday, June 25, 2017

5ன் மடங்குகள் ஈசி பெருக்கல்

உதாரணம் :
(1)  125ஐ  93 ஆல்  பெருக்கலாம்.  ( 125  பெருக்கல்  93 =  11625 )
       *  93  உடன்  மூன்று  பூஜ்ஜியங்களை  சேர்ப்போம்  93000.
       *  கிடைத்த  விடையை  8  ஆல்  வகுக்கவும்  93000 / 8  =  11625.
(2)  125ஐ  137 ஆல்  பெருக்கலாம். ( 125  பெருக்கல்  137  =  17125 ).
       *  137  உடன்  மூன்று  பூஜ்ஜியங்களை  சேர்ப்போம்  137000.
       *   கிடைத்த  விடையை  8  ஆல்  வகுக்கவும்  137000 /  8  =  17125.
           அடுத்ததாக  25ஐ  வைத்து  பெருக்குவோம்.
உதாரணம் :
(1)  25 ஐ  67  ஆல்  பெருக்கலாம்.  ( 25  பெருக்கல் 67  =  1675 ).
       *  67  உடன்  இரண்டு  பூஜ்ஜியங்களை  சேர்ப்போம்  6700.
       *  கிடைத்த  விடையை  4  ஆல்  வகுக்கவும்  6700 /  4  =  1675.
(2 )  25 ஐ  376  ஆல்  பெருக்கலாம்.  ( 25  பெருக்கல்  376  =  9400 ).
       * 376  உடன்  இரண்டு  பூஜ்ஜியங்களை  சேர்ப்போம்  37600.
       *  கிடைத்த  விடையை  4  ஆல்  வகுக்கவும்  37600 /  4 =  9400. 

Saturday, June 24, 2017

டிடிஎச் சேவை பிடிக்கலையா?

வந்தாச்சு  புது  வசதி.
     மிகவும்  போட்டி  நிறைந்த  வர்த்தக  சந்தையாக  டிடிஎச்  சேவையும்  உருவாகிவருகிறது.  டிஷ்  டிவி,  ஏர்டெல்,  ரிலையன்ஸ்,  டாடா  ஸ்கை  என  பல  நிறுவனங்கள்  டிடிஎச்  சேவையை  வழங்கிவருகின்றன.
     ஒரு  டிடிஎச்சை  வாங்கும்  வாடிக்கையாளர்கள்  மற்றொரு  டிடிஎச்  சேவை  பெற  இப்போது  வசதி  இல்லை.  முற்றிலுமாக  புதிய  சாதனங்களை  வாங்கி  பொருத்தினால்  மட்டுமே  அதன்  சேவையை  பெற  முடியும்.  ஆனால்,  விரைவில்  இதர்கு  தீர்வு  ஏற்பட  உள்ளது.
     டிடிஎச்  சேவை  வழங்கும்  நிறுவனத்தை  மாற்றிக்  கொள்ளும்  வகையில்  புதிய  கருவியை  அறிமுகப்படுத்த  ஹாங்காங்கை  சேர்ந்த  ஸ்மிட்  கார்ப்பரேஷன்  நிறுவனம்  திட்டமிட்டுள்ளது.  கார்டு  போன்ற  இந்த  சாதனத்தை  செட்  டாப்  பாக்ஸில்  பொருத்தி,  வேறு  டிடிஎச்  சேவைக்கு  மாற்ற  முடியும்  என  தெரிகிறது.  இது  தொடர்பாக  கட்டுப்பாட்டு  அமைப்பான  டிராயுடன்  பேசி  வருவதாகவும்  தகவல்  வெளியகி  உள்ளது.  கண்டிஷனல்  அக்சஸ்  மாடுயூல்  ( கேம் )  என்ற  கார்டு  போன்ற  சாதனத்தை  பாக்ஸில்  பொருத்திக்  கொள்ளலாம்.  இதனை  பயன்படுத்தி,  வேறு  சேவைக்கு  மாற  முடியும்.  மெலும்  செட்டாப்  பாக்ஸ்  இன்றி  டிவி  பார்க்க  வசதியாகவும்  ஒரு  சிப்பை  அறிமுகப்படுத்த  திட்டமிட்டுள்ளோம்.  ஆனால்  அதற்கு  அந்த  குறிப்பிட்ட  டிவியில்  டிஜிட்டல்  டியூனர்  ஏற்கனவே  பொருத்தப்பட்டிருக்க  வேண்டும்.
     ஏற்கனவே  இந்த  கார்டு  பொருத்தும்  வசதியை  டிஷ்  டிவி  அறிமுகப்படுத்தியது.  எனினும்  இதற்கு  நம்நாட்டில்  போதிய  வரவேற்பு  கிடைக்கவில்லை.  ஆனால்  தற்போது  ஒரு  பொது  நிறுவனம்  இத்தகைய  கார்டை  அறிமுகப்படுத்த  உள்ளதால்,  டிராய்  அதை  அனுமதிக்கும்  பட்சத்தில்,  சந்தையில்  நல்ல  வரவேற்பு  கிடைக்கும்  என்று  எதிர்பார்க்கப்படுகிறது.  இது  தொடர்பாக  ஸ்மிட்  நிறுவனம்  சில  டிடிஎச்  நிறுவனங்களுடன்  பேசி  வருவதாகவும்  கூறப்படுகிறது.
--   தினமலர்  திருச்சி 7 -2 -2013. 

Friday, June 23, 2017

புத்தபிட்சு உடல்

200  ஆண்டுகளுக்கு  முந்தைய  'மம்மியி'யில்,   பத்மாசனத்தில்  புத்தபிட்சு  உடல்.
     மங்கோலியாவின்  சங்கிங்  கோகையர்கான்  மாநிலத்தில்  தொல்பொருள்  துறை  ஆய்வாளர்கள்  நடத்திய  ஆய்வின்  போது  200  ஆண்டுகளுக்கு  முந்தைய  முதுமக்கள்  தாழி  ( மம்மி )  கண்டெடுக்கப்பட்டுள்ளது.  அதில் பத்மாசனத்தில்  அமர்ந்த  நிலையில்  அடக்கம்  செய்யப்பட்ட  புத்தபிட்சுவின்  உடல்  தோண்டி  எடுக்கப்பட்டுள்ளது.
      திபெத்  புத்த  பிட்சுக்களிடம்  இதுபோல்  தியான  நிலையில்  உயிர்விடும்  பழக்கம்  இருந்து  வந்ததால்,  இந்த பிட்சுவும்  திபெத்திய  லாமாவின்  சீடராக  இருக்கலாம்  என்று  கூறப்படுகிறது.  கால்நடையின்  தோலால்  சுற்றி  பதப்படுத்தப்பட்டிரிந்த  புத்த  பிட்சு  உடலில்  உண்மையான  வயதை  கண்டுபிடிக்கும்  ஆய்வில்  ஆய்வாளர்கள்  ஈடுபட்டுள்ளனர்.
--    தினமலர்  திருச்சி 29 -1 -2015.      

Thursday, June 22, 2017

சனியை போன்று புதிய கிரகம்

  சூரிய  குடும்பத்தில்  இருந்து  420  ஒளி  ஆண்டு  தொலைவுக்கு  அப்பால்  வளையத்துடன்  கூடிய  புதிய  கிரகத்தை  விஞ்ஞானிகள்  கண்டுபிடித்துள்ளனர்.
     ஜே147பி  என்று  பெயரிடப்பட்டுள்ள  அந்த  கிரகம்  சனி  கிரகத்தின்  வளையத்தைவிட  200  மடங்கு  பெரியது  என்று  விஞ்ஞானிகள்  தெரிவித்துள்ளனர்.
     இந்த  கிரகத்தை  பற்றி  லெய்டன்  வானியல்  ஆய்வு  மையத்தின்  விஞ்ஞானி  மேத்திவ்  கென்வோர்த்  கூறுகையில்,  'ஜே147பி  கிரகம்  பூமியை  விட  10  மடங்கு  அதிக  எடை  கொண்டதாக  இருக்கும்  என்று  தெரிவித்தார்.
--   தினமலர்  திருச்சி 29 -1 -2015. 

Wednesday, June 21, 2017

பார்க்கிங் பிரச்னை.

  பார்க்கிங்  பிரச்னைக்கு  தீர்வு  காணும்  வகையில்  ஒருநபர்  செல்லும்  காரை  ஹூண்டாய்  நிறுவனம்  உருவாக்கி  உள்ளது.
பார்ப்பதற்கு  பெரிய  சைஸ்  முட்டையைபோல  காட்சியளிக்கும்  இந்த  காரில்  ஒருவர்  மட்டுமே  பயணிக்க  முடியும்.  இ4யு  என்று  பெயரிடப்பட்டுள்ள  இந்த  கார்,  எலக்ட்ரிக்  பேட்டரியில்  இயங்கக்கூடியது.  மிகவும்  பார்க்கிங்  நெருக்கடி  மிகுந்த  நகர்புறங்களில்  பயனுள்ளதாக  இருக்கும்  வகையில்  இந்த  முட்டை  கார்  வடிவமைக்கப்பட்டுள்ளது.
     இந்த  கார்   24  வோல்ட்  500  வாட்  பாட்டரியில்  இயங்குகிறது.  மணிக்கு  அதிகபட்சமாக  28  கி.மீ  வேகத்தில்  செல்ல  முடியும்.  பின்புற  கரங்களை  மடக்கி  வைக்க  முடியும்  என்பதால்  இந்த  முட்டை  வடிவ  காரை  நிறுத்த  இட  தேவை  மிகவும்  குறைவு.  இந்த  வாகனத்தின்  மேற்புறம்  ஒரு  பெரிய  சைஸ்  ஹெல்மட்டை  போலவே  உள்ளது.
     தெங்கொரியாவில்  உள்ள  கோயாங்  நகரில்  நடந்த  சியோல்  வாகன  கண்காட்சியில்  இந்த  முட்டை  வடிவ  காரை  ஹூண்டாய்  நிறுவனம்  அறிமுகப்படுத்தியது.
--   தினமலர்  திருச்சி 8 -4 -2013.  

Tuesday, June 20, 2017

விண்கல்

விண்கல்  பிடித்து  இழுத்து  வந்து  சந்திரன்  அருகே  நிறுத்த  திட்டம்.
'நாசா'  தீவிரம்
     விண்வெளியில்  பல  சிறிய  மற்றும்  பிரம்மாண்டமான  விண்கற்கள்  சுற்றி  வருகின்றன.  சில  நேரங்களில்  பூமிக்கு  நெருக்கமாக  விண்கல்  வரும்போது,  பூமியில்  அந்த  விண்கல்  மோதுமோ  என்ற  அச்சம்  ஏற்படுக்கிறது.  இதுபோன்ற  பூமியை  நெருங்கி  வரும்  விண்கற்களை  அமெரிக்க  விண்வெளி  ஆராய்ச்சி  நிறுவனம்  'நாசா'  கண்காணித்து  வருகிறது.
     ஒரு  விண்கல்லில்  விண்வெளி  வீரர்களை  இறக்கி  ஆராய்ச்சி  செய்ய  நாசா  திட்டமிட்டது.  இதற்கு  பல  ஆண்டுகள்  ஆகலாம்.  எனவே,  ரோபா  விண்கலம்  அனுப்பி,  விண்வெளியில்  இருந்து  ஒரு  சிறிய  விண்கல்லை  பிடித்து  இழுத்து  வந்து,  சந்திரன்  அருகே  நிலைநிறுத்த  திட்டம்  வகுக்கப்பட்டுள்ளது.
      முதலில்  500  டன்  எடையும்,  25  அடி  குறுக்களவும்  கொண்ட  ஒரு  சிறிய  விண்கல்  தேடிக்  கண்டுபிடிக்கப்படும்.  பின்னர்,  2019ம்  ஆண்டுக்குள்  ரோபா  விண்கலம்  அனுப்பி,  அந்த  விண்கல்  இழுத்து  வரப்பட்டு,  சந்திரன்  அருகே  நிலைநிறுத்தப்படும்.
      இதைத்தொடர்ந்து,  இப்போது  உருவாக்கப்பட்டு  வரும்  ஒரியான்  விண்கலத்தில்  4  விண்வெளி  வீரர்கள் 2021ம்  ஆண்டு  சென்று  விண்கல்லை  சுற்றி  விண்வெளியில்  நடந்து  ஆராய்ச்சி  செய்வார்கள்.  எதிர்காலத்தில்  விண்கல்  மற்றும்  செவ்வாய்  கிரகத்துக்கு  மனிதர்களை  அனுப்பும்  திட்டங்களுக்கு  இந்த  ஆராய்ச்சி  உதவியாக  இருக்கும்.
     விண்வெளியில்  உலாவும்  ஆயிரக்கணக்கான  விண்கற்களில்,  பூமியை  நெருங்கி  வரும்  சரியான  விண்கல்லை  சரியான  நேரத்தில்  கண்டுபிடிப்பது  கடினம்  ஆகும்.  சரியான  விண்கல்  கண்டுபிடிக்கப்பட்டால்,  இழுவைக்  கயிறு  இணைக்கப்பட்ட  வலைப்பை  போன்ற  ரோபோ  விண்கலம்  அனுப்பிவைக்கப்படும்.  வலைப்பையில்  விண்கல்லை  மாட்டி,  ரோபோ  விண்கலம்  இழுத்து  வரும்.  அதை  எங்கு  வேண்டுமானாலும்  நிலை  நிறுத்தலாம்.
     சிறிய  விண்கல்  என்பதால்,  பூமிக்கு  ஆபத்து  ஏற்படாது.  நிறுத்தப்பட்ட  இடத்தில்  இருந்து  விண்கல்  நழுவி  பூமியை  நோக்கி  வந்தால்,  காற்று  மண்டலத்தில்  நுழைந்ததும்  அது  எரிந்து  சாம்பலாகி  விடும்.
--  தினமலர்  திருச்சி 8 -4 -2013.  

Monday, June 19, 2017

எஸ்எம்எஸ் மூலம் செல்போன் சார்ஜ்.

  மின்  இணைப்பு  இல்லாத  கிராமங்களில்  செல்போன்  சார்ஜ்  தீர்ந்துவிட்டால், எஸ்எம்எஸ்  மூலம்  இயங்கும்  சூரிய  ஒளியில்  தயாரிக்கப்பட்ட  மின்சாரத்தை  கொண்டு  செல்போனை  சார்ஜ்  செய்யும்  மையங்களை  இங்கிலாந்தைச்  சேர்ந்த  'புபல்லோ  கிரிட்'  நிறுவனம்  வடிவமைத்துள்ளது.
     மின்  இணைப்பு  இல்லாத  கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள  செல்போன்  சார்ஜ்  மையத்தில்  உள்ள  பேட்டரி,  சூரிய  ஒளியில்  இருந்து  மின்சாரம்  தயாரிக்கும்  பேனலுடன்  இணைக்கப்பட்டிருக்கும்.  சூரிய  ஒளியின்  அளவு  மற்றும்  வெப்பத்தின்  அளவை  பொருத்து  உற்பத்தியாகும்  மின்சாரம்,  பேனலுடன்  இணைக்கப்பட்ட  பேட்டரியில்  சேமிக்கப்படும்.  இப்படி  ஒரு  முறை,  பேட்டரியின்  முழு  அளவுக்கு  மின்சாரம்  உற்பத்தி  செய்யப்பட்டு  சேமிக்கப்பட்டால்  அதிலிருந்து  3  நாட்களுக்கு  செல்போன்களை  சார்ஜ்  செய்து  கொள்ள  முடியும்.
     அந்த  பேட்டரியுடன்  செல்போனை  சார்ஜ்  செய்யும்  'சாக்கெட்'  இணைக்கப்பட்டிருக்கும்.  சார்ஜ்  செய்ய  வேண்டிய  செல்போனில்  இருந்து  அந்த  நிறுவனம்  அறிவித்துள்ள  முறையில்  ஒரு  எஸ்எம்எஸ்  அனுப்பினால்,  சாக்கெட்டின்  மேல்புறத்தில்  இருக்கும்  எல்.ஈ.டி. லைட்  எரியும்.  இதையடுத்து  அந்த  சாக்கெட்டில்  நமது  செல்போனை  பொருத்தி  சார்ஜ்  செய்துகொள்ளலாம்.
     சார்ஜ்  செய்வதற்காக  நமது  செல்போனில்  இருந்து  எஸ்எம்எஸ்  அனுப்பியதும்,  ஒரு  குறிப்பிட்ட  தொகை  நமது  போனில்  உள்ள  டாக்  வெல்யூவில்  இருந்து  கட்டணமாக  கழிக்கப்படும்.  ஒரு  போனில்  இருந்து  ஒரு  முறை  எஸ்எம்எஸ்  அனுப்பினால்,  அந்த  போனை  ஒன்றரை  மணி  நேரம்  வரை  சார்ஜ்  செய்து  கொள்ளலாம்.
     செல்போன்  சார்ஜ்  செய்யும்  மையத்தில்  உள்ள  டவரில்   10  சார்ஜ்  பாயின்ட்கள்  பொருத்தப்பட்டிருக்கும்.  அதில்  இரு  நாளைக்கு  30ல்  இருந்து  50  செல்போன்கள்  வரை  சார்ஜ்  செய்யலாம்.
-- தினமலர்  திருச்சி  12-3-2013.