பகவான் ரமணரை சந்தித்த பக்தர் ஒருவர், "பகவானே! பூஜை, ஜபம், தியானம் இவற்றின் தன்மைகளைப் பற்றிக் கூறுங்கள்!" என்று கேட்டார்.
"உடல், வாக்கு, மனம் என்ற மூன்றும் பங்கு பெறுவது பூகை. வாக்கும், மனமும் மட்டும் ஈடுபடுவது ஜபம். கடைசியில் மனம் மட்டும் தனித்து இயங்கி நிற்பதே தியானம்" என்றார் ரமணர்.
-- டி.பூபதிராவ், காஞ்சிபுரம்.
மும்மூர்த்திகளும் லிங்க வடிவில்!
திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோயில் ஆயிரங்கால் மண்டபத்துக்கு எதிரே திரிமூர்த்தி கோயில் உள்ளது. இங்கு மும்மூர்த்திகளும் லிங்க வடிவில் காட்சி தருகின்றனர்.
-- மல்லிகா அன்பழகன், சென்னை- 78.
உப வேதங்கள்
வேதங்கள் நான்கு என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அவை தவிர நான்கு உபவேதங்கள் இருக்கின்றன. அவை :
1. ஆயுர்வேதம்: உடலை நோய்களிலிருந்து காப்பாற்றி ஆயுளை அதிகரிக்கும் மருத்துவம்.
2. தனுர் வேதம் : தற்காத்துக் கொள்ளும் போர்ப் பயிற்சிகளைக் கற்றுத் தருவது.
3. காந்தர்வ வேதம் : மனதிற்கு இன்பமூட்டும் இசை, நடிப்பு, நடனம் முதலியவை.
4. அர்த்த வேதம் : பொருள்களைச் சம்பாதிக்கும் உபாயங்களைத் தெரிவிப்பது.
-- ஏ.கே.என்., டி.ஆர். பட்டினம்.
-- குமுதம் பக்தி ஸ்பெஷல். 29-1-2015.

No comments:
Post a Comment