மலேஷியா பத்துமலை முருகன் கோயில்!
உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை ( 140 அடி ) மலேஷியாவின் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ தூரத்தில் பத்துமலை என்ற இடத்தில் உள்ளது.
திருவாரூரைச் சேர்ந்த சிற்பி தியாகராசன் மற்றும் 14 உதவியாளர்களுடன் 3 ஆண்டு கடின உழைப்பில் உருவானது இந்த முருகன் சிலை. மலேஷியாவின் கின்னஸ் புத்தகத்தில் இச்சிலைப் பற்றிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
29-1-2006ம் ஆண்டு சிலை திறப்பு நடைபெற்றது. தரையில் இருந்து 400 அடி உயரத்தில் குகையில் அமைந்திருக்கும் முருகனை தரிசிக்க 272 படிக்கட்டுகள் ஏறிச் செல்ல வேண்டும். குகையில் வேலாயுதம் கோயிலும் அலுவலகமும் உள்ளது.
கோயில் வரலாறு :
தமிழகத்தில் திருமலைராயன் பட்டினம் ஊரைச் சேர்ந்த தம்புசாமி பிள்ளை, கந்தப்பத்தேவர் துணையுடன் குகைக் கோயிலில் முதலில் வேல் மட்டும் நட்டு வணங்க தொடங்கினார்கள்.
மலைமேல் தமிழ்க்கடவுள் முருகனின் வேல் இருப்பதை அறிந்த பக்தர்கள் கஷ்டப்பட்டு மலையேறி 'வேல்' வழிபாடு செய்து மகிழ்ந்தனர். அப்போது அவ்வேலை அகற்ற கோலாலம்பூர் ஆட்சியர் ஜோஸ்துரை முனைந்தார். அதை பக்தர்கள் எதிர்த்தனர். எனவே வழக்குப் பதிவு செய்யப்பட , இறுதியில், முருகபக்தர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது.
அதன்பின் 1891ம் ஆண்டு திராவிடக் கட்டடக் கலையின் அமைப்பில் கோயில் கட்டப்பட்டது. 1892ம் ஆண்டில் இருந்து தை பூச விழா இங்கு கொண்டாடப்பட்டு வருகிறது.
1920ம் ஆண்டு மலைமேல் செல்லவும், கீழே இறங்கவும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டன. 1939ல் அதனருகிலேயே இன்னொரு படிக்கட்டு வரிசையும், 1975ல் மூன்றாவது படிக்கட்டுகளும் கட்டப்பட்டன. பின்னர் கோயிலுக்கு வெள்ளி ரதம் உருவானது.
பத்துமலை அடிவாரத்தில் 50 அடி அனுமன் சிலை, விநாயகர் கோயில், வள்ளி, தெய்வானையுடன் கூடிய சுப்ரமண்யர் கோயில் உண்டு. அங்குள்ள கலைக்கூடத்தில் 1330 திருக்குறள் மற்றும் அவ்வையார், திருவள்ளுவர், வள்ளலார், காந்தி, நாயன்மார்கள், ராமாயண சிற்பங்கள் இருக்கின்றன.
பத்துமலை முருகனுக்கு இந்துக்கள் மட்டுமல்ல, சீனர்களும் மற்ற மதத்தவரும் ஈடுபாடுகொண்டு விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
-- ந.சண்முகம், திருவண்ணாமலை.
-- தினமலர் பக்திமலர். 11-12-2014.

No comments:
Post a Comment