Tuesday, June 20, 2017

விண்கல்

விண்கல்  பிடித்து  இழுத்து  வந்து  சந்திரன்  அருகே  நிறுத்த  திட்டம்.
'நாசா'  தீவிரம்
     விண்வெளியில்  பல  சிறிய  மற்றும்  பிரம்மாண்டமான  விண்கற்கள்  சுற்றி  வருகின்றன.  சில  நேரங்களில்  பூமிக்கு  நெருக்கமாக  விண்கல்  வரும்போது,  பூமியில்  அந்த  விண்கல்  மோதுமோ  என்ற  அச்சம்  ஏற்படுக்கிறது.  இதுபோன்ற  பூமியை  நெருங்கி  வரும்  விண்கற்களை  அமெரிக்க  விண்வெளி  ஆராய்ச்சி  நிறுவனம்  'நாசா'  கண்காணித்து  வருகிறது.
     ஒரு  விண்கல்லில்  விண்வெளி  வீரர்களை  இறக்கி  ஆராய்ச்சி  செய்ய  நாசா  திட்டமிட்டது.  இதற்கு  பல  ஆண்டுகள்  ஆகலாம்.  எனவே,  ரோபா  விண்கலம்  அனுப்பி,  விண்வெளியில்  இருந்து  ஒரு  சிறிய  விண்கல்லை  பிடித்து  இழுத்து  வந்து,  சந்திரன்  அருகே  நிலைநிறுத்த  திட்டம்  வகுக்கப்பட்டுள்ளது.
      முதலில்  500  டன்  எடையும்,  25  அடி  குறுக்களவும்  கொண்ட  ஒரு  சிறிய  விண்கல்  தேடிக்  கண்டுபிடிக்கப்படும்.  பின்னர்,  2019ம்  ஆண்டுக்குள்  ரோபா  விண்கலம்  அனுப்பி,  அந்த  விண்கல்  இழுத்து  வரப்பட்டு,  சந்திரன்  அருகே  நிலைநிறுத்தப்படும்.
      இதைத்தொடர்ந்து,  இப்போது  உருவாக்கப்பட்டு  வரும்  ஒரியான்  விண்கலத்தில்  4  விண்வெளி  வீரர்கள் 2021ம்  ஆண்டு  சென்று  விண்கல்லை  சுற்றி  விண்வெளியில்  நடந்து  ஆராய்ச்சி  செய்வார்கள்.  எதிர்காலத்தில்  விண்கல்  மற்றும்  செவ்வாய்  கிரகத்துக்கு  மனிதர்களை  அனுப்பும்  திட்டங்களுக்கு  இந்த  ஆராய்ச்சி  உதவியாக  இருக்கும்.
     விண்வெளியில்  உலாவும்  ஆயிரக்கணக்கான  விண்கற்களில்,  பூமியை  நெருங்கி  வரும்  சரியான  விண்கல்லை  சரியான  நேரத்தில்  கண்டுபிடிப்பது  கடினம்  ஆகும்.  சரியான  விண்கல்  கண்டுபிடிக்கப்பட்டால்,  இழுவைக்  கயிறு  இணைக்கப்பட்ட  வலைப்பை  போன்ற  ரோபோ  விண்கலம்  அனுப்பிவைக்கப்படும்.  வலைப்பையில்  விண்கல்லை  மாட்டி,  ரோபோ  விண்கலம்  இழுத்து  வரும்.  அதை  எங்கு  வேண்டுமானாலும்  நிலை  நிறுத்தலாம்.
     சிறிய  விண்கல்  என்பதால்,  பூமிக்கு  ஆபத்து  ஏற்படாது.  நிறுத்தப்பட்ட  இடத்தில்  இருந்து  விண்கல்  நழுவி  பூமியை  நோக்கி  வந்தால்,  காற்று  மண்டலத்தில்  நுழைந்ததும்  அது  எரிந்து  சாம்பலாகி  விடும்.
--  தினமலர்  திருச்சி 8 -4 -2013.  

No comments: