பார்க்கிங் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் ஒருநபர் செல்லும் காரை ஹூண்டாய் நிறுவனம் உருவாக்கி உள்ளது.
பார்ப்பதற்கு பெரிய சைஸ் முட்டையைபோல காட்சியளிக்கும் இந்த காரில் ஒருவர் மட்டுமே பயணிக்க முடியும். இ4யு என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கார், எலக்ட்ரிக் பேட்டரியில் இயங்கக்கூடியது. மிகவும் பார்க்கிங் நெருக்கடி மிகுந்த நகர்புறங்களில் பயனுள்ளதாக இருக்கும் வகையில் இந்த முட்டை கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த கார் 24 வோல்ட் 500 வாட் பாட்டரியில் இயங்குகிறது. மணிக்கு அதிகபட்சமாக 28 கி.மீ வேகத்தில் செல்ல முடியும். பின்புற கரங்களை மடக்கி வைக்க முடியும் என்பதால் இந்த முட்டை வடிவ காரை நிறுத்த இட தேவை மிகவும் குறைவு. இந்த வாகனத்தின் மேற்புறம் ஒரு பெரிய சைஸ் ஹெல்மட்டை போலவே உள்ளது.
தெங்கொரியாவில் உள்ள கோயாங் நகரில் நடந்த சியோல் வாகன கண்காட்சியில் இந்த முட்டை வடிவ காரை ஹூண்டாய் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.
-- தினமலர் திருச்சி 8 -4 -2013.

No comments:
Post a Comment