அந்த ஊரின் பெரிய செல்வந்தர், தன் நான்கு பிள்ளைகளை அழைத்து, 'என் காட்டிலுக்கு அடியில் பூமியில் புதைத்து வைத்துள்ள நான்கு பானைகளில் உள்ளபடி சொத்தைப் பிரித்து எடுத்துக் கொள்ளுங்கள்' எனக்கூறி உயிர் துறந்தார்.
அவரது இறுதிச்சடங்குகள் முடிந்து, சில நாட்களுக்குப் பிறகு மகன்கள் அந்த நான்கு பானைகளை வெளியே எடுத்தனர். வரிசையாக ஒவ்வொரு பானையிலும் மண், கரிக்கட்டை, வைக்கோல், எலும்புத் துண்டு என இருந்தன.
ஒன்றும் புரியாமல் அந்தப் பானைகளை எடுத்துச் சென்று ஓர் துறவியிடம் காட்டி, விளக்கம் கேட்டனர்.
வயதில் மூத்தவனுக்கு மண் பானை, இரண்டாமவனுக்கு வைக்கோல் பானை, மூன்றாமவனுக்கு எலும்புத்துண்டு பானை, நான்காமவனுக்கு கரித்துண்டு பானைகளைக் கொடுத்தார். ஒன்றும் புரியாது நால்வரும் விழிக்க, துறவி விளக்கினார்.
மண் - செல்வந்தரின் நிலங்கள், வைக்கோல் - தானியங்கள், எலுபுத்துண்டு - கால்நடைகள், கரித்துண்டு - தங்கம், வெள்ளி பாத்திரங்களை அடையலாம் எனக் கூறினார். நான்கு சகோதரர்களும் அவ்வாறே தம் தந்தையின் சொத்துகளைப் பிரித்து எடுத்துக்கொண்டனர்.
-- வீ.லோகநாதன் , அம்பத்தூர் (பக்திக் கதைகள்)
-- குமுதம் பக்தி ஸ்பெஷல். 29-1-2015.

No comments:
Post a Comment