உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் தானியங்கி கார் தயாரிப்பு முயற்சியில் இறங்கியுள்ளன. கூகுள் நிறுவனம் தனியாக செல்ப் டிரைவிங் கார்களுக்கான முயற்சியிலும் இறங்கியுள்ளது. கார் தயாரிப்பு நிறுவனங்களோ டிரைவர் இல்லாமல் முழுக்க முழுக்க சென்சார்கள் மூலம் இயங்கக்கூடிய வாகனங்களை தயாரிப்பதற்கான முயற்சியில் ஈடுப்படுள்ளன. பிஎம்டபிள்யூ நிறுவனம் இதற்கான முயற்சியில் ஈடுப்பட்டுள்ளது.
ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய சாலைகளில் இந்த வகை கார்களை பரிசோதித்துள்ளது. அதிலிருந்து மேம்படுத்திய மாடலை 2016ல் சீன சாலைகளில் பரிசோதிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
கண்ணாடியில் திரைப்படம்
கூகுள் கண்ணாடி மூலம் உலகை கண்ணருகில் கொண்டுவந்துவிடலாம் என்பது ஒருபக்கம். இன்னொருபக்கம் ஒரு ஹெட்போனை மாட்டிக்கொண்டு இசையை ரசிப்பது மட்டுமல்ல, இனி படங்களையும் பார்த்துவிடலாம். கண்ணையும் மறைப்பதுபோல உள்ள இந்த ஹெட்செட்டில் திரைப்படத்தைப் பார்ப்பதற்கான திரை ஒன்று உள்ளது. கண்ணுக்கருகில் வைத்து பார்ப்பதால் ரெட்டினாவை பாதிக்காத வண்ணம் இந்த திரை தயாரிக்கப்பட்டிருக்கிறது. கம்ப்யூட்டர், தொலைக்காட்சி பெட்டி போன்றவற்றை நேரடியாக பார்ப்பதைவிட இணைப்பு கொடுத்து பார்க்கலாம். அடுத்த்வர்களுக்கு தொந்தரவு கொடுக்காமல் கண்டு ரசிக்க இந்த கருவி பயன்படும்.
-- வணிக வீதி இணைப்பு.
-- 'தி இந்து' நாளிதழ். திங்கள், ஜனவரி 19, 2015.

No comments:
Post a Comment