" பொதுவாகவே நல்ல பெட்ரோலானது எங்கு சிந்தினாலும் சிறிது நேரத்தில் சிந்திய சுவடு தெரியாமல் மாயமாகி விடும் . கலப்பட பெட்ரோல் மட்டுமே சிந்திய இடத்தில் சிறிய வரைபடம் போன்று அதன் எல்லைக் கோட்டை விட்டுச் செல்லும் .
நீங்கள் எந்த பங்கில் பெட்ரோல் போட்டாலும் உங்களுக்கு சந்தேகம் வந்தால் அந்த பங்கின் நிர்வாகியிடம் அதை பரிசோதிப்பதற்கான ஃபில்டர் பேப்பர்களை கேட்டு வாங்குங்கள் . அதில் சிறிது பெட்ரோலை விடுங்கள் . எந்த தடயமும் இல்லாமல் மாயமாய் மறைந்துவிடும் . கலப்படம் இருந்தால் திட்டுத் திட்டாய் கலப்படம் செய்யப்பட்ட பொருளின் கறை படிந்து நிற்கும் .
கலப்படம் இல்லாத பெட்ரோலைக்கூட அதன் தரம் எப்படி இருகிறது என்று நீங்கள் பரிசோதித்துப் பார்க்க நினைத்தால் அதற்கான டென்ஸிட்டி மீட்டார் - அடர்த்திமானியும் பங்கில் இருக்கும் . அதை வாங்கி டென்ஸிட்டியை அளவிட்டு , பங்கில் போர்டில் எழுதிப் போட்டிருக்கும் அடர்த்தியும் இதுவும் ஒன்றாக இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ளலாம் .அதில் ஏதும் முரண்பாடு தென்பட்டால் அந்த பங்கில் விற்பனை செய்யப்படும் பெட்ரோல் நிறுவனத்திற்கு தொடர்புகொண்டு உங்கள் புகாரை தெரிவிக்கலாம் . அந்த தொலைபேசி எண்ணும் எல்லா பங்கிலும் எழுதப்பட்டிருக்கும் .
--- தகவல் தமயந்தி , குமுதம் , 16 - 09 - 2009 .
1 comment:
இனிய தமிழர் திருநாள் நல்வாழ்துக்கள்
Post a Comment