Friday, January 15, 2010

காடு !

' அளவுக்கு அதிகமாக மழை பெய்தால் , ஊரெல்லாம் வெள்ளக்காடாக காட்சி தருகிறது ' என்று சொல்கிறார்களே ... நாட்டில் மழை பெய்தால் , காட்டை ஏன் இழுக்க வேண்டும் ?
' காடு ' என்பதற்கு அடிப்படையான அர்த்தமே ' அளவுக்கு அதிகமான ( மிகுதி , excessive )' என்பதுதான் . உதாரணமாக , இறந்தவர்களின் ஏராளமான உடல்கள் புதைக்கப்பட்டு இருக்கும் இடத்தைக்கூட ' இடுகாடு ' என்கிறோம் . ஆங்கிலத்தில்கூட forest of swords , concrete jungle என்கிற வார்த்தைகள் உண்டு .
--- ஹாய் மதன் , ஆனந்தவிகடன் . 16 - 09 - 2009 .
மார்பிள்ஸ் .
மார்பிள்ஸ் என்பது இயற்கையாகக் கிடைக்கும் ஒரு வகையான சுண்ணாம்புக் கல் . நம் ஊரில் பூமியைத் தோண்டினால் மண் வருவது போல ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் பூமியின் உள்ளே பாறை பாறையாக மார்பிள்ஸ் கிடைக்கின்றன . அவைதான் நம் வீடுகளை அலங்கரிக்கின்றன . மார்பிள்ஸைக் கொண்டு தரைத் தளம் அமைகப்படும் வீடுகளில் எப்போதும் குளிர்ச்சி இருக்கும் . குளிர்ச்சியைத் தக்கவைக்கும் தன்மையும் , வெப்பத்தை வெளியேற்றும் தன்மையும் மார்பிள்ஸூக்கு உண்டு . காதலின் சின்னமான தாஜ்மஹால் முழுக்க , முழுக்க மார்பிள்ஸ் கற்களைக் கொண்டு கட்டப்பட்டது .
--- பாரதி தம்பி , கிரஹப்பிரவேசம் . ஆனந்தவிகடன் , 16 - 09 - 2009 .

No comments: