நெஞ்சுக்கூட்டுக்கும் வயிற்றுக்கும் நடுவே குடை போன்ற தசை உறுப்பு ஒன்று உள்ளது . இதை ஆங்கிலத்தில் டயாப்ரம் என்பர் . இதற்கும் நுரையீரல் இரைப்பை முதலிய உறுப்புகளுக்கும் ஒரே நரம்பு தான் உணர்வூட்டுகிறது . இந்த உறுப்புகளில் எங்காவது உறுத்தல் ஏற்பட்டால் டயாப்ரம் இறுகி விடும் . அப்போது விக்கல் ஏற்படும் .
மூக்கிலிருந்தும் வாயிலிருந்தும் காற்றை வெளியேற்றும் தன்னிச்சை செயலே தும்மல் . அதை நம்மால் கட்டுப்படுத்த முடியாது . மூக்கிலுள்ள சளிச் சவ்வின் நரம்பு மூளைகளில் உறுத்தல் மிகப் பிரகாசமான ஒளியால் தாக்கப்படும் போதும் இது ஏற்படும் .
சாதாரணமாக அடினாய்ட்ஸ் வளர்ச்சி அல்லது மூக்கு வழியாகச் சிறிது அடைப்பு காரணமாக சிலர் வாய்வழியாக மூச்சுவிட நேரிடுகிறது . சிலர் காரணமில்லாமலேயே கூட வாய்வழியாக மூச்சு விடும் பழக்கத்தைப் பெற்றிருப்பபார்கள் . இப்படிப்பட்டவர்கள் மூக்கு வழியாக மூச்சு இழுத்து விடுவதற்கு பதிலாக வாய்வழியாக மூச்சு இழுத்து விடுவதால் தொண்டை வழியே வெளியேறும் காற்று குறட்டை சப்தமாக வெளியேறுகிறது .
நமது உடலில் சேரும் புரதச் சத்து அதாவது புரோட்டின் ஆனது கெராட்டின் ஆக உருவெடுப்பதால் அவை நகங்களாக வளருகிறது .
--- தினமலர் நவம்பர் 27 , 2009 .
No comments:
Post a Comment