சதாம் ஹுசேனின் அழிவுக்குக் காரணம் யார் தெரியுமா ? ஏப்ரல் ஃபூல் என்கிற உளவாளி ! சதாமை நெருங்க அமெரிக்கப் புலனாய்வுத் துறை ஏப்ரல் ஃபூல் என்கிற புனைபெயரில் ஓர் உளவாளியைத் தாயார் செய்து அனுப்பியது .
அமெரிக்காவைப்பற்றிய சரியான துப்புகள் கொடுத்ததால் இராக் ராணுவம் ஏப்ரல் ஃபூலை விலைக்கு வாங்கியது . ஒவ்வொரு தகவலுக்கும் லட்சக்கணக்கில் பணம் பெற்றார் ஃபூல் . ' வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் இருந்து அமெரிக்கா தாக்குதல் நடத்தத் திட்டம் போட்டிருக்கிறது ' என்று ஃபூல் கொடுத்த தகவலை நம்பி , அங்கே படைகளைக் குவித்தார் சதாம் . திட்டம் போட்டபடி கிழக்கு மற்றும் தென்கிழக்குத் திசையில் இருந்து அமெரிக்க காலாட்படை ஆக்ரோஷமாகத் தாக்கியது . இராக் ஆடிப்போனது . மூன்றே வாரங்களில் பாக்தாத் வீழ்ந்தது .
இராக் ரசாயனப் பேரழிவு ஆயுதங்கள் வைத்திருப்பதாகச் சொல்லித்தான் போரை ஆரம்பித்தது அமெரிக்கா . அங்கே ஆயுதங்களும் இல்லை ... ஆய்வுக்கூடங்களும் இல்லை . போரின் இறுதியில் அமெரிக்காவே ஏப்ரல் ஃபூல் ஆனது தனிக்கதை !
---- பா. முருகானந்தம் . உளவாளி விகடன் . 23 . 12 . 2009 .
No comments:
Post a Comment