Monday, May 17, 2010

சூயிங்கம் .

சூயிங்கம் மெல்லுவது நல்லதா ?
சிக்கின் என்ற பொருளிலிருந்து தயாரிக்கப்படுகின்றது சூயிங்கம் . இந்த சிக்கின் , சபொடில்ல என்ற மரத்தின் பிசின் . இது தென் அமெரிக்கா , மத்திய அமெரிக்கா , மெக்சிகோவில் விளையும் மரமாகும் . இந்த மரங்களை குறுக்கு வாட்டில் வெட்டி , அடிப்பாகத்திலிருந்து 30 அடிக்கு மேலே இருக்கும் மரத்தின் கீழ் பக்கெட்டை வைத்து , மரத்திலிருந்து வடியும் பிசினை சேகரித்துக்கொண்டு , அதை கொதிக்க வைத்து , மர அச்சுகளில் ஊற்றுகிறார்கள் . இதை மீண்டும் தொழிற்சாலைக்கு அனுப்பி கொதிக்க வைத்து சுத்தப்படுத்தி , பின்னர் , வாசனைப் பொருளையும் , சர்க்கரையையும் சேர்த்து , சூயிங்கமாக தயாரிக்கிறார்கள் .
சூயிங்கம் செரிமானம் ஆகக்கூடிய உணவுப்பொருளல்ல . அதை விழுங்கிவிட்டால் உணவுக்குழாயில் சிக்கி , பிரச்னையை ஏற்படுத்திவிடும் . எனவே , குழந்தைகள் சூயிங்கத்தை சுவைப்பதை தவிர்ப்பதே நல்லது .
--- தினமலர் . டிசம்பர் 11 , 2009 .

No comments: