Wednesday, May 26, 2010

காசி , திருவையாறு !

காசியில் கங்கை , யமுனை , சரஸ்வதி என்று சொல்லும் ஆறுகளுடன் கிரணா , தூத்பாபா என்னும் நதிகள் சேர ஐந்து நதிகள் கலக்கும் இடம் பஞ்சநதம் எனப்படும் . காசி மகாத்மியம் இந்த ஐந்து நதிகள் கூடும் இடத்தின் பெருமையை விளக்குகிறது .
தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாதத்திலும் மாதப் பிறப்பு அன்று தீர்த்தவாரி நடக்கும் தலம் திருவையாறு . இதுவும் ஒரு பஞ்சநதீஸ்வரம்தான் . கங்கை நீர் , பிரமதேவனின் கமண்டல நீர் , உமையம்மையின் கொங்கை நீர் , கொண்டல் நீர் , குள நந்தி வாயிலிருந்து வரும் நுரை நீர் ஆகிய ஐந்து வகையான நீர் கூடி காவிரியில் சங்கமமாகும் இடமே திருவையாறு எனப்படும் . திருவையாற்றில் நீராட எல்ல வினைகளும் அகலும்

No comments: