Tuesday, November 2, 2010

கணக்குப் புலி !

நண்பர்களிடம் , " நான் ஒரு மேஜிக் கணக்கு சொல்வேன் . கடைசியில் வரும் விடையில் என்ன எண் இருக்கிறதோ , அந்த எண்ணுக்குரிய ஆங்கில எழுத்தில் தொடங்கும் விலங்கை நீங்கள் நினைத்துக் கொள்ள வேண்டும் .... அது என்ன விலங்கு என்று நான் சட்டென சொல்லிவிடுவேன் !" என்று ' பில்டெப் பேச்சு ' பேசுங்கள் .
பிறகு கீழ்க்கண்டபடி சொல்லுங்கள் ...
1 . எந்த எண்ணை வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளுங்கள் .
2 . அந்த எண்ணை 2 -ஆல் பெருக்குங்கள் .
3 . வரும் விடையோடு 20 ஐ கூட்டுங்கள் .
4 . வரும் விடையை 2 -ஆல் வகுத்துக் கொள்ளுங்கள் .
5 . வரும் விடையில் இருந்து , நீங்கள் முதலில் நினைத்த எண்ணை கழித்துக் கொள்ளூங்கள் .
6 . வரும் விடையை 2 -ஆல் பெருக்குங்கள் .
7 . வரும் விடைக்கு உரிய ஆங்கில எழுத்தைக் கண்டுபிடியுங்கள் . அந்த எழுத்தில் துவங்கும் பயங்கரமான காட்டு விலங்கு ஒன்றை நினைத்துக் கொள்ளுங்கள் !
-- இப்படி சொல்லிவிட்டு , " என்ன நினைத்துக் கொண்டீர்களா ?" என்று கேளூங்கள் ! அவர்கள் தலையாட்டுவார்கள் !
உடனே , " நீங்கள் நினைத்தது டைகர்...புலி !" என்று கம்பீரமாகச் சொல்லுங்கள் .
" கரெக்ட் ! எப்படி கண்டுபிடிச்சே ? நீ கணக்குப் புலி ! " என்று நண்பர்கள் அசந்து பாராட்டுவார்கள் !
மேஜிக் சீக்ரெட் : எந்த எண்ணை வைத்து இந்தக் கணக்கை செய்தாலும் விடை 20 -தான் வரும் ! ஆங்கிலத்தில் 20 -வது எழுத்து ' T ' ( S எழுத்துக்குப் பிறகு வருவது ) . பயங்கரமான காட்டு விலங்கை நினைக்க வேண்டும் என்று நீங்கள் சொன்னதால் எல்லோருமே டைகர் ( புலி ) என்றுதான் நினைப்பார்கள் !
--- தினமலர் , ஜூலை 23 , 2010.

No comments: