' கெடுக்க முயன்றால் கடித்து விடும் '
இனி, கற்பை பாதுகாக்க சூப்பர் காண்டம் வந்தாச்சு.
தென் ஆப்பிரிக்க பெண் டாக்டர் சானட் எலர்ஸ், உலகிலேயே முதல் முறையாக, பெண்களை பாலியல் வல்லுறவில் இருந்து தடுக்கக்கூடிய காண்டம் தயாரித்து சாதனை படைத்துள்ளார். அவர், ' ரேப் - ஆக்ஸ் ' என்று அதற்கு பெயரிட்டுள்ளார். அணியும் பெண்களுக்கு வேண்டுமானால் அது சாதாரணமான லேடக்ஸ் ரப்பராக இருக்கலாம். அணிந்திருக்கும் பெண்ணை பலாத்காரம் செய்ய ஆண் முயன்றால், அது வெறும் ரப்பரல்ல... ரம்பம் என்பதை காட்டி விடும். ஆம். கூரான பற்களை கொண்ட காண்டம். ஆணுறுப்பை கடித்து விடும்.
வல்லுறவு கொள்ள முயற்சிக்கும் ஆண்...அடுத்த நொடியே அய்யோ... அம்மா.. என்று அலறியடித்து ஓட வேண்டியத்துதான். அதுவும், ஒருமுறை கடித்ததும் ஆணுறுப்பை காண்டத்தின் பற்கள் விடவே விடாது. குற்றத்தில் இறங்கிய ஆண் எவ்வளவு முயன்றாலும் அதை பிரித்தெடுக்க முடியாது. முயன்றால் காண்டம் மேலும் இறுக்கி வலியை அதிகரிக்கும். தப்பிக்க டாக்டரின் உதவியை நாடியே ஆக வேண்டியிருக்கும்.
இந்த நிலைமையில் ஒருவர் சிகிச்சைக்கு வந்தாலே, அவர் ஒரு பெண்ணிடம் பலாத்காரத்தில் இறங்கியதை டாக்டர் கண்டுபிடித்து போலீசுக்கு புகார் செய்யலாம். உடனடி கைது தான். இதனால், பலாத்கார குற்றங்கள் பெருமளவில் குறைந்து விடும். இதை சோதித்து பார்ப்பதற்காக உலக கோப்பை கால்பந்து நடக்கும் தென் ஆப்பிரிக்காவில் 30,000 காண்டம்களை டாக்டர் சானட் விநியோகிக்க உள்ளார். ' ரேப் - ஆக்ஸ் ' ரூ. 100க்கு கிடைக்கும்.
இதுபற்றி சானட் எலர்ஸ் கூறுகையில், " 40 ஆண்டுகளுக்கு முன் மருத்துவ ஆராய்ச்சி மாணவியாக இருந்தேன். அப்போது, பலாத்காரத்தில் சிக்கிய ஒரு இளம்பெண் என்னிடம் வந்தார். விரக்தியின் உச்சத்தில் இருந்த அவர், ' பெண்ணுறுப்பில் பற்கள் இருந்திருந்தால் இந்த கதி ஏற்பட்டிருக்காது ' என்று குறிப்பிட்டார். அவஸ்தையால் வந்த அந்த வார்த்தைகள் தான் இந்த காண்டம் உருவாக காரணம் " என்றார்.
--- தினகரன், 22 ஜூன் 2010.
No comments:
Post a Comment