Monday, November 29, 2010

நோயாளியா ?

ரத்த அழுத்த நோயாளியா ?
மாத்திரை போல செயல்படும். ரத்த அழுத்த நோயாளியா ? தினமும் சாக்லேட் சாப்பிடுங்க. ஆஸி. ஆய்வில் தகவல்.
ரத்த அழுத்த நோயாளிகள் தினமும் சாக்லேட் சாப்பிட்டு வந்தால் ரத்த ஓட்டம் சீராகி, பாதிப்பு குறையும் என்று ஆஸ்திரேலிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
சாக்லேட்டில் ப்ளேவனாய்ட் என்ற ஒரு ரசாயன பொருள் உள்ளது. அது ரத்தத்தில் செயல்படும் விதம் பற்றி ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு ஆராய்ச்சி நடத்தியது. அதில் வெளியான தகவல்கள் :
அடைபடும் ரத்த தமனிகளை திறக்க செய்வதில் ப்ளேவனாய்டு ரசாயன பொருள் மிகவும் சிறப்பாக செயல்படுகிறது. அடைபட்டிருக்கும் ரத்தம் இளகி சீராக ஓடுவதற்கு ரத்த தமனியை அது ஊக்குவிக்கிறது. இந்த ப்ளேவனாய்டு ரசாயனம், சாக்லேட்டில் அதிகமுள்ளது.
எனவே, தினசரி சிறிதளவு சாக்லேட் சாப்பிட்டு வருவதால், ரத்த ஓட்டம் சீராகி, அழுத்தம் குறைந்து விடும். உயர் ரத்த அழுத்தம் பாதித்தவர்களுக்கு சாக்லேட் சாப்பிட்ட சிறிது நேரத்தில் ரத்த அழுத்தம் குறைவது ஆய்வில் தெரிய வந்தது.
எனவே, ரத்த அழுத்த நோயாளிகள் ஒவ்வொரு முறை பாதிப்பின்போதும் மருந்து, மாத்திரைகளை நாடாமல், சாக்லேட் சாப்பிட்டாலே ஓரளவு நிவாரணம் பெறலாம். எனினும், உடனடி பலன் 5 சதவீதம் வரை மட்டுமே இருக்கும் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இது பற்றி அடிலெய்டு பல்கலைக்கழக ஆய்வு குழு பேராசிரியர் கார்வின் ரீட் கூறுகையில், " ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு எப்போதும் மருந்து தேவைப்படாது. உணவுகளே மருந்தாக அமையும். அவற்றில் சாக்லேட்டும் ஒன்று " என்றார்.
--- தினகரன் , 29 ஜூன் , 2010.

No comments: