டிசம்பர் 20 முதல் ரயில் எண்கள் 5 இலக்கமாக மாற்றம் .
ரயில்களுக்கு இப்போது 4 இலக்க எண்கள் வழங்கப்பட்டுள்ளன . இதன்மூலம் 9 ஆயிரத்து 999 ரயில்களுக்கு மட்டுமே எண்கள் வழங்க முடியும் . ஆனால், நாடு முழுவதும் பயணிகள் வசதிக்காக தினமும் சராசரியாக 11 ஆயிரம் ரயில்கள் இயக்கப்படுகின்றன . எனவே, ரயில்களின் எண்களை 5 இலக்கமாக மாற்ற முடிவு செய்யப்பட்டது .
இதன்படி, எக்ஸ்பிரஸ் ரயில்களின் இப்போதைய எண் முன்பு ' 1 ' சேர்க்கப்படுகிறது . சிறப்பு ரயில்களுக்கு ' 0 ', வழக்கமான பாசஞ்சர் ரயில்களுக்கு ' 5 ', மெயின்லைன் ரயில்களுக்கு ' 6 ', டீசல் இஞ்சின் ரயில்களுக்கு ' 7 ' எண்கள் சேர்க்கப்படும் . ' 3 ' என்ற எண்ணுடன் கோல்கத்தா புறநகர் ரயில்களுக்கும், ' 9 ' என்ற எண்ணுடன் மும்பை புறநகர் ரயில்களுக்கும், ' 9 ' என்ற எண்ணுடன் சென்னை உட்பட மற்ற நகரங்களின் புறநகர் ரயில்களுக்கும் எண்கள் தொடங்கும் . இந்த மாற்றம் டிசம்பர் 20 ம்தேதி அமுலுக்கு வரும் .
--- தினமலர் . 19 . 11 . 10 .
No comments:
Post a Comment