Friday, December 24, 2010

ஹோட்டல் நாகரிகம் .

ஹோட்டலில் இப்படித்தான் சாப்பிட வேண்டும் என்ற வரைமுறை இருக்கிறது .
இன்று ஹோட்டலில் சாப்பிடுவது பலருக்கும் தவிர்க்க முடியாததாகி விட்டது . ஆனால் , ஹோட்டலில் முறைப்படி எப்படி சாப்பிடுவது , ஸ்பூன் , ஃபோர்க்கை எப்படிப் பிடிப்பது , நாப்கினை எப்படி உபயோகிப்பது என்று கூட பலருக்குத் தெரிவதில்லை . இதோ அவர்களுக்கு உதவும் வகையில் இந்த டிப்ஸ்...
முதலில் அங்குள்ள நாப்கின் மடிப்புகளை நீக்கி , இரண்டாக மடித்துக் கொள்ளுங்கள் . சாப்பிடும் முன் நாப்கினை மடியில் விரிக்க வேண்டும் .
கத்தியை வலது கையிலும் , ஃபோர்க்கை இடது கையிலும் பிடிக்க வேண்டும் .
சூப் குடிக்கும்போது , ஸ்பூனின் கைப்பிடியைக் கடிகாரத்தின் 4 மணி திசையிலும் , ஸ்பூனின் தலைப்பகுதியை 11 மணி திசையிலும் இருக்கும்படி வைத்து எதிர்ப்புறமாக சூப்பை அள்ள வேண்டும் . அப்போதுதான் , சூப் நம்மேல் சிந்தாது .
கத்தியையும் ஃபோர்க்கையும் பிடித்து பிரெட்டையோ , மற்ற உணவுப் பொருட்களையோ ' கட் ' செய்ய வேண்டும் . ஃபோர்கால் உணவைக் குத்தி சாப்பிட ஆரம்பிக்க வேண்டும் .
சாப்பிட்டு முடித்துவிட்டீர்கள் என்றால் ஃபோர்க்கையும் கத்தியையும் இணையாக அடுத்தடுத்து சேர்த்து வையுங்கள் . இன்னும் சாப்பிட வேண்டும் என்று ஆர்டர் செய்வதாக இருந்தால் , ஃபோர்க்கையும் கத்தியையும் ஒன்றின் மேல் ஒன்றாக ( பெருக்கல் குறி போல ) வையுங்கள் .
பெரும்பாலான ஸ்டார் ஹோட்டல்களில் டிக்காஷன் , பால் , சர்க்கரை இவைகளைத் தனித்தனியாக வைக்கப்பட்டிருக்கும் . முதலில் டிக்காஷனை கப்பில் ஊற்றி , பிறகு அதில் தேவையான் பால் ஊற்றி , பின்பு சர்க்கரையைப் போட்டு ஸ்பூனால் கலக்கவேண்டும் . சூப்போ , காஃபியோ சத்தம் போட்டு உறிஞ்சிக் குடிக்காதீர்கள் .
தும்மலோ இருமலோ வந்தால் , நாப்கின் கொண்டே உங்கள் முகத்தை நாசுக்காக மறைத்துக் கொள்ளுங்கள் .
உணவுப் பொருள் பல்லில் மாட்டிக் கொண்டால் , நாப்கினை வைத்து , வாயை மறைத்தபடி பல் குத்தும் குச்சியால் ( அங்கு பல் குத்தும் குச்சி இருக்கும் ) சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள் .
--- தனலட்சுமி சுந்தர், குமுதம் சினேகிதி / டிசம்பர் 1 . 2006 .

2 comments:

sriram said...

இவ்ளோ சொன்னவங்களுக்கு சாப்பிடும் இடத்தின் பெயர் ஹோட்டல் அல்ல Restaurant என்று தெரியாமல் போனது ஆச்சர்யமே. தங்கும் அறைகள் இருந்த்தால் தான் அது ஹோட்டல்..

என்றும் அன்புடன்
பாஸ்ட்ன் ஸ்ரீராம்

க. சந்தானம் said...

அன்பு பாஸ்டன் ஸ்ரீராம் அவர்களுக்கு, ந்ன்கு சொன்னீர்கள் நன்றி !