Saturday, December 10, 2011

வலி மாத்திரை வேண்டாம் .

கர்ப்பிணிகளே உஷார்.... வலி மாத்திரை வேண்டாம் !
வலி நிவாரண மாத்திரைகளை கர்ப்பிணிப் பெண்கள் அதிகம் சாப்பிட்டால், அது அவர்கள் வயிற்றில் இருக்கும் ஆண் குழந்தைக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் என்று லண்டனை சேர்ந்த ஒரு ஆய்வு நிறுவனம் ஆதாரத்துடன் அதிர்ச்சித் தகவலை வெளியிடுள்ளது .
உலகில் உள்ள கர்ப்பிணி பெண்களில் 50 சதவிகிதம் பேர் ' பெயின்கில்லர் '. என்று சொல்லப்படும் வலி நிவாரண மாத்திரைகளை எடுத்துக்கொள்வதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது .வலி நிவாரண மாத்திரைகளை எடுத்துக்கொண்டால், அது தாயின் கருவில் இருக்கும் ஆண் குழந்தையின் இனப்பெருக்க உறுப்பை செயல் இழக்கச் செய்துவிடுகிறதாம் . அதாவது அந்த ஆண் குழந்தை வாலிபனாகும்போது, விந்தணு உற்பத்தி குறைந்துவிடுமாம் . அதுபோல டெஸ்டிக்கிள் புற்றுநோய் ஏற்படவும் வலி நிவாரண மாத்திரைகள் காரணமாகிவிடுகின்றன என்றும் அந்த ஆய்வு எச்சரிக்கிறது .
ஒரு கர்ப்பிணி தனது கர்ப்ப காலத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வலி நிவாரண மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் பாதிப்பு 7 மடங்காக அதிகரிக்குமாம் . 4 முதல் 6 மாதம் வரையிலான கர்ப்பக் காலத்தில்தான் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்துமாம் . அதாவது இந்த காலக்கட்டத்தில் ஒரு வலி நிவாரண மாத்திரையை சாப்பிட்டால், அது 2 மாத்திரை சாப்பிட்டதற்கான பின்விளைவுகளை ஏற்படுத்துமாம் .
அதிலும் பாரசிட்டமால் மருந்து 2 மடங்கும், புருபென், ஆஸ்பிரின் போன்றவை 4 மடங்கும், பாதிப்பை ஏற்படுத்தும் என்று அந்த ஆய்வுத்தகவல் மேலும் எச்சரிக்கிறது . இதனால்தான் பெரும்பாலான டாக்டர்கள், கர்ப்பிணிகள் யாரும் வலி நிவாரண மாத்திரை சாப்பிடக்கூடாது என்று எச்சரிக்கிறார்கள் .
--- தினமலர் .. நவம்பர் 11 .2010 .

No comments: