Tuesday, December 27, 2011

கம்ப்யூட்டரில்...

ரூபாய், காசு புள்ளியுடன் எழுத .
எக்சல் ஒர்க் ஷீட்டில் கரன்சியான ரூபாய் எவ்வளவு என்று குறிப்பிடுகையில் சரியாகக் கணக்கிடும் வகையில் பைசாவையும் சேர்த்துக் குறிப்பிடுவொம் . ஆனால் ஒவ்வொரு முறையும் ரூபாய்க்கும் காசுக்கும் இடையே புள்ளி அமைப்பது சற்று சிரமமாக இருக்கும் . இதனை எக்சல் புரோகிராமே அமைக்கும்படி செட்செய்திடலாம் .
உதாரனமாக, நீங்கள் பண மதிப்பைக் குறிப்பிடுகையில் ரூபாய் காசு இணைந்த எண்ணை புள்ளி இடாமல் முதலில் அமைக்கவும் . உதாரணமாக 11245, 2345, 5693, 236798 என அமைப்பதாக வைத்துக்கொள்வோம் . நீங்கள் கீழ்காணும் முறையில் அமைத்துவிட்டால் இந்த எண்கள் 112.45, 23.45, 56.93, 2367.98 என அமைக்கப்படும் . நீங்கள் செட் செய்திட வேண்டிய முறை :
1 . Tools மெனு கிளிக் செய்து அதில் Options பிரிவைத் தேர்ந்தெடுக்கவும் .
2 . இனி கிடைக்கும் Options என்னும் பல டேப்கள் அடங்கிய விண்டோவில் Edit என்னும் டேபில் கிளிக் செய்திடவும் . இதில் Fixed decimal என்னும் பிரிவில் செக் செய்திடவும் . இப்போது Places என்னும் இடத்தின் முன்னால் 2 என அமைத்திடவும் . பின் ஓகே கிளிக் செய்து விண்டோவை மூடவும் . இனி நீங்கள் அமைத்திடும் எண்களின் இறுதி இரண்டு இலக்கங்களுக்கு முன்னால் புள்ளி தானே அமைக்கப்படும் . இந்த செயல்பாடு தேவையில்லை என்றால் Fixed decimal என்னும் பிரிவின் முன் உள்ள டிக் அடையாளத்தை எடுத்து விடவும் .
--- தினமலர் , 21 . 6. 2011 .

No comments: