பாலைவனம் !
' எந்த இடத்தில் ஒரு சில சிறப்புத் தாவரங்களைத் தவிர பொதுவான தாவரங்கள் வளர முடியாத வகையில் ஈரப்பதம் மிகக் குறைவாக இருக்கிறதோ, அந்த இடம்தான் பாலவனம் ' -- இதுதான், ' பாலைவனம் ' என்ற வார்த்தைக்கான அறிவியல் வரையறை . இந்த வரையறைப்படி, குளிர்நிறைந்த ஆர்க்டிக் துருவப்பகுதியும் பாலைவனம்தான் !
டி.பி. நோய் !
" Mycobacterium tuberculosis என்னும் பாக்டீரியா உடலில் இருந்தால்தான், பரிசோதனையில் டி.பி. பாசிட்டிவ் என்று ரிசல்ட் காண்பிக்கும் . உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு டி.பி. தொற்றிக்கொள்ளும் வாய்ப்பு அதிகம் "
பேப்பர் கப் !
அமெரிக்காவின் பாஸ்டன் பகுதியைச் சேர்ந்த லாரன்ஸ் லுலன் என்ற வழக்கறிஞர்தான் 1907 -ல் ஆண்டில் பேப்பர் கப்களைக் கண்டுபிடித்தார் . " ஒரே கப்பைப் பலரும் பயன்படுத்தும்போது கிருமி தொற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு . அதைத் தடுக்கவே இதைக் கண்டுபிடித்தேன் " என்று குறிப்பிட்ட அவர், தனது கண்டுபிடிப்புக்கு ' ஹெல்த் கப் ' என்று பெயர் சூட்டினார் .
கொலாஜ் ஓவியம் !
காகிதங்கள் அல்லது மரத்துண்டுகளை வெட்டி ஒட்டி உருவாக்கப்படும் ஓவியத்தைத்தான் கொலாஜ் ஓவியம் என்கிறார்கள் . கொலே என்ற பிரெஞ்சு வார்த்தைக்கு ' பசை ' என்று அர்த்தம் . காகிதத் துண்டு அல்லது மரத்துண்டுகளை பசையால் ஒட்டி உருவாக்கும் ஓவியம் என்பதால்தான் ' கொலாஜ் ' என்ற பெயர் வந்தது .
பாப்கார்ன் !
சோளத்தில் இருந்துதான் சோளப்பொரி ( பாப்கார்ன் ) தயாரிக்கப்படுகிறது . சோளத்தைக் கவனியுங்கள் . அதன் மத்தியில் ஈரப்பதமும், அதைச் சுற்றிலும் கடினமான மாவுச்சத்தும் இருக்கிறது . சோளப்பொரியைத் தயாரிக்க, சோளத்தைச் சூடாக்குவார்கள் . அப்போது, அதன் மத்தியில் உள்ள ஈரப்பதம் விரைவில் வெப்பமடையும் . இதனால் உருவாகும் நீராவி, கடினமான மாவுச்சத்து பகுதியில் ஊடுருவி வெளியேறும் . இதன் விளைவாக, கடினமான மாவுச்சத்து வெந்து மென்மையாக மாறும் . நீராவி வளைந்து நெளிந்து வெளியேறும் என்பதால், அதற்கு ஏற்றபடி மாவுச்சத்து பகுதியும் வளைந்து நெளியும் . இந்த செயல்பாடுதான், சோளப்பொரியை பூ போல் விரிய வைக்கிறது .
யானை !
யானையின் பற்கள் விசித்திரமானவை . பிறந்த யானைக்குட்டிக்கு நான்கு பற்கள் இருக்கும் . அவை பலமிழந்து விழுந்ததும் மீண்டும் நான்கு பற்கள் முளைக்கும் . இப்படி யானையின் ஆயுளில் அதிகபட்சமாக 7 முறை பற்கள் முளைக்கும் . அதாவது, ஒரு யானையின் ஆயுளில் அதற்கு மொத்தம் 28 பற்கள் இருக்க வாய்ப்பு உண்டு . சராசரியாக, ஒரு பல்லின் எடை 4 கிலோ அளவில் இருக்கும் !
----தினமலர் பல இணைப்புகளிலிருந்து .
No comments:
Post a Comment