தேங்காய் எண்ணெயில் ஓடும் விமானம் !
உலகளவில், முன்னணி விமான நிறுவனமான ' வெர்ஜின் அட்லாண்டிக் ' நிறுவனம், தேங்காய் எண்ணெயை எரிபொருளாகக் கொண்டு விமானத்தை இயக்கி உள்ளது . பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வரும் நிலையில், மாற்று எரிபொருளாக, பயோ எரி பொருளை பயன்படுத்துவது குறித்து ஆய்வு நடந்து வருகிறது . இதற்கான முயற்சியில், வெர்ஜின் அட்லாண்டிக் நிறுவனம் பல ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளது .
இதன் ஒரு கட்டமாக தேங்காய் எண்ணை மற்றும் தென் அமெரிக்காவில் அமேசான் காடுகளில் விளையும் ஒரு வகை பனை மரத்தின் கொட்டைகளில் இருந்து எடுக்கப்படும் பாபாசூ எண்ணையில் இருந்து உருவாக்கப்பட்ட புதிய எரிபொருளை, இந்நிறுவனம் பயன்படுத்தியது .
லண்டனில் உள்ள ஹீத்ரு விமான நிலையத்தில் இருந்து, நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டர்டாம் விமான நிலையம் வரை, இந்த எரிபொருளை கொண்டு, போயிங் ரக ஜெட் விமானம் இயக்கப்பட்டது .
இந்த சோதனை ஓட்டம் வெற்றி பெற்றிருக்கிறது . விமானத்தில் நான்கு எரிபொருள் டாங்குகள் உள்ளன . அதில் ஒன்றில், புதிய எரிபொருள் நிரப்பப்பட்டு இருந்தது . இந்த விமானத்தில், பயணிகள் பயணம் செய்யவில்லை . பைலட்டுகளும், தொழில்நுட்ப நிபுணர்களும் மட்டுமே பயணம் செய்தனர் .
--- தினமலர் இணைப்பு , 29 . 1 . 2011 .
No comments:
Post a Comment