Sunday, December 18, 2011

துணிகளில் ரத்தக் கறை !

துணிகளில் படிந்துவிட்ட ரத்தக் கறையைப் போக்குவதற்கு ஏதாவது கெமிக்கல் இருக்கிறதா ?
' ரத்தக்கறை படிந்த துணியை முதலில் தண்ணீரில் நனைத்து ஈரமாக்கி, பின் நன்றாக பிழிந்துகொள்ளவும் . அதன்பின் கறை படிந்த புள்ளிகளில், இடங்களில் மட்டும் படும்படி ஹைட் ரஜன் பெர் ஆக்ஸைடு கரைசலை ஒரு சிறிய பிரஷ்ஷால் தொட்டு வைக்கவும் . வைத்த சிறிது நேரத்தில் அந்தக் கரைசல் நுரைக்கத் தொடங்கும் . அது நன்றாக நுரைத்தபின் அந்த இடத்தை பிரஷ் செய்து சுத்தமாக தண்ணீர்விட்டு அலசவும் . அப்பொழுதும் லேசாக ரத்தக்கறை தென்பட்டால் அது முற்றிலும் போகும்வரை ஹைட்ரஜன் பெர் ஆக்ஸைடு கரைசலால் அந்த இடத்தை மீண்டும் மீண்டும் சுத்தம் செய்யலாம் . எல்லாம் முடிந்தவுடன் கடைசியாக அந்த ஹைட்ரஜன் பெர் ஆக்ஸைடு கரைசல் துணியில் எங்கும் ஒட்டியிருக்காத அளவிற்கு நன்கு துவைத்து உலர்த்தி பயன்படுத்தவேண்டும் ."
வைரம் !
" பூமிக்கு அடியில் இருக்கும் கார்பன் படிமங்கள்தான் வைரமாக உருவாகிறது . கரியாக இருந்து வைரமாக மாறுவதற்கு குறைந்தபட்சம் 990,000,000 வருடங்கள் ஆகும் . இது குறைந்த பட்சம் . இதற்கு மேலும் ஆகலாம் . வைரங்களில் இளஞ்சிவப்பு, மஞ்சள், நீல நிறத்தில் உள்ள வைரங்கள் கொஞ்சம் காஸ்ட்லியானவை . அபூர்வமானவை .
செயற்கை வைரங்கள் கிரிஸ்டல், கிளாஸ் உட்பட பல்வேறு பொருட்களில் இருந்து உருவாக்கப்படுகிறது . செயற்கை வைரங்களில் கியூபிக் ஜிர்கோனியா மொஸானைட் என இரண்டுவித வைரங்கள் ஒரிஜினல் வைரங்கள் போலவே தோற்றமளிக்கும் . அதைப் பாகுபடுத்தி பார்ப்பது சிறிது கடினம்தான் ."
--- தகவல் தமயந்தி , குமுதம் . 14 . 4 . 2010 .

No comments: