Wednesday, December 14, 2011

இனிக்கும் கணக்கு !

முதல் இலக்கம் ' 1 ' ஆக உள்ள இரு இரட்டை இலக்க எண்களை ஈஸியாகப் பெருக்கும் சூப்பர் பெருக்கல் டெக்னிக் .கீழே உள்ள இரு உதாரணங்களையும் நன்கு கவனித்து பயிற்சி செய்தால் நல்லது .
* உதாரணம் : 1 : 11 x 13 .
1 . கடைசி இரு இலக்கங்களைப் பெருக்குங்கள் : 1 x 3 = 3 . இதுதான் விடையின் கடைசி இலக்கம் .
2 . கடைசி இரு இலக்கங்களைக் கூட்டுங்கள் : 1 + 3 = 4 . இதுதான் விடையின் நடு இலக்கம் .
3 . பிறகு இந்த இரு இலக்கங்களுக்கு முன் ' 1' சேர்த்தால் விடை வந்துவிடும் . = 143 .
* உதாரணம் 2 : 12 x 18 .
1 . கடைசி இரு இலக்கங்களைப் பெருக்குங்கள் : 2 x 8 = 16 . இதன் கடைசி இலக்கம்தான் 12 x 18 -ன் விடையில் கடைசி இலக்கம் = 6 ; எஞ்சியுள்ள எண்ணை ( 1 ) அப்படியே வைத்துக்கொள்ளவும் .
2 . கடைசி இரு இலக்கங்களைக் கூட்டுங்கள் : 2 + 8 = 10 .இதோடு முன்னர் எஞ்சியுள்ள 1 - ஐ கூட்டவும் = 11 ; இதில் உள்ள கடைசி எண் ' 1 ' தான் 12 x 18 -ன் விடையின் நடு இலக்கம் = 1 ; எஞ்சியுள்ள எண்ணை ( 1 ) அப்படியே வைத்துக்கொள்ளவும் .
3 . முன்னர் எஞ்சியுள்ள எண் ( 1 ) உடன் ' 1 ' கூட்டினால், அதுதான் 12 x 18 - ன் விடையில் முதல் எண் ; அதாவது 1 + 1 = 2. எனவே, 12 x 18 = 216 .
---தினமலர் இணைப்பு . 25 . 3 . 2011 .

No comments: