கிட்னி ஃபெயிலியரில் அக்யூட், கிரானிக்கில் என்று இரண்டு வகை . இதில் முதல் வகையை மருந்துகள் மூலம் கட்டுப்படுத்தி, குணப்படுத்தி விட முடியும் . குறிப்பிட்ட காலத்திற்கு டயாலிசிஸ் செய்தால் போதும் . ஆனால் கிரானிக்கில் அப்படி அல்ல . குணப்படுத்த முடியாது . மாறாக வாழ்நாள் முழுவதும் டயாலிசிஸ் சிகிச்சையை தொடரவேண்டும் .
உடலில் இருக்கும் ரத்தத்தை சுத்தப்படுத்த்ம் வேலையை கனக்கச்சிதமாகச் செய்வது கிட்னிதான் . அடிவயிற்றின் ஆழத்தில் அவரை விதைகள் போல் இருக்கும் இந்த உறுப்புகள் செயலிழந்து போக நிறைய காரணங்கள் உண்டு . அப்போது செயற்கையாக ரத்தத்தை சுத்திகரிக்கச் செய்யப்படுவதுதான் ' டயாலிசிஸ் '. சுருக்கமாக ' கிட்னி' யின் வேலையை, இயந்திரம் செய்வதுதான் டயாலிசிஸ் .
டயாலிசிஸ் இரண்டு வகை . ஒன்று... ' பெரிடோனியல் டயாலிசிஸ் '. சுருக்கமாக ( பி.டி . ) ' ஹீமோ டயாலிசிஸ் ' மற்றொன்று .
முதல் வகையில் வயிற்றுக்குள் இருக்கும் ஒருவித சவ்வினை ( மெம்ப்ரேன் ) பயன்படுத்துவார்கள் . அதன்படி, ரத்தத்தை செறிவு குறைந்த திரவ நிலையில் வெளியே எடுத்து, சவ்வூடு பரவல் முறையில் ( ஆஸ்மாசிஸ் ) சுத்தம் செய்து திருப்பி உள்ளே அனுப்புவார்கள் .
இரண்டாவது வகை சற்று சிரமமானது . அதன்படி, நோயாளியின் உடலிலிருந்து குழாய் மூலம் ரத்தத்தை முழுவதும் ( 5 லிட்டர் ) வேகமாக வெளியே எடுப்பார்கள் . பின்னர் அதே வேகத்தில் உடலுக்குள் செலுத்துவார்கள் .
இந்த இரண்டு முறைகளில் சிகிச்சை அளிக்கும்போது நோயாளி சற்று துவண்டு போவது உண்டு . ஆனால் அதனைச் சமாளிக்க மருந்துகளும் நடைமுறையில் இருக்கு .
--- எஸ். அன்வர் , குமுதம் 15 . 6 .2011 .
No comments:
Post a Comment