இயற்கையோடு சில பரிசோதனைகள்.
மரத்திலிருந்து பல அடிகள் தள்ளி நின்று நீரூற்றிக் கொண்டிருந்தார் ஒரு முதியவர். பெயர் அலீ மனிக்ஃபான்.
பல அடிகள் தள்ளி நின்று மரங்களுக்கு நீர் ஊற்றுவது ஏன் என்று கேட்டதற்கு, மரங்களின் வேர்கள் இயல்பாகவே நீரைத் தேடிப் பயணிக்கக்கூடியவை. சற்றுத் தொலைவில் நீரூற்றும்போது, அதைத் தேடி அந்த வேர்கள் பரவும். அதனால் மரம் வலிமையாக நிலைகொள்ளும். ஆனால், மரத்தின் அடியிலேயே நீரை ஊற்றி அதன் தற்சார்புத் தன்மையை பலவீனப்படுத்துகிறோம் என்றார் அந்த முடியவர்.
ஆடு தின்னும் அனைத்து இலை தழைகளையும் மனிதனும் சாப்பிடலாம் என்று கூறும் இவர், சமைப்பதே இல்லை. இலை தழைகள்தான் இவருடைய அன்றாட உணவு. நோய் வந்தால் மருந்து உட்கொள்ளுவது இல்லை. நோன்பு பிடிப்பதன் மூலமாக நோய் தீர்க்கும் உடலின் ஆற்றல் செயல்படத் தொடங்குவதாகக் கூறினார். கால் நடைகளுக்கு நோய் வந்தால் அவை உண்ண மறுக்கின்றன. நோய் சரியான பிறகே மீண்டும் இரை எடுக்கத் தொடங்குகின்றன என விளக்கினார்.
-- சாளை பஷீர். உயிர் மூச்சு.
-- 'தி இந்து' நாளிதழ். செவ்வாய், ஏப்ரல் 29, 2014.