"சமீபத்தில் உங்களைப் பயமுறுத்திய செய்தி எது?"
"டிஸ்கவரி தமிழ் சேனலில், பிளாஸ்டிக் பாட்டிலைச் சாப்பிட்டதால் இறந்துபோன முதலையைப் பற்றி காட்டினார்கள். முதலையால் நம்மைப் போல் கீழ் தாடையை அசைக்க முடியாது. வரிக்குதிரையையோ, மானையையோ கொன்று பெரிய பெரிய துண்டுகளாகக் கடித்து, நான்கு முறை மென்று அப்படியே விழுங்கிவிடும். உறுதியான எலும்புகளையும் கடுமையான கறித் துண்டுகளையும் எளிதாக ஜீரணிக்கும் முதலையால், சின்ன பிளாஸ்டிக் பாட்டில் ஒன்றை ஜீரணிக்க முடியவில்லை.
உலகெங்கும் கொட்டப்படும் லட்சக்கணக்கான டன் பிளாஸ்டிக் கழிவு, மண் வளம், வனவிலங்குகளை மட்டுமல்ல... மனிதனையும் விரைவில் 'தின்று செரிக்கும்'!"
-- எஸ்.மோகன் குமார், சேலம்.
-- ஆனந்த விகடன். 30-4-2014.

No comments:
Post a Comment