12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தியாவில் உள்ள சாதுக்கள் அனைவரும் ஒன்றுகூடி நடத்தும் மேளா திருவிழாவே கும்பமேளா. உலகின் மிக அதிக அளவு மக்கள் கூடும் மதத் திருவிழா கும்பமேளாதான்.இந்த ஆண்டு அலகாபாத்தில் நடக்கும் திருவிழா 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் சிறப்பு பெற்ற மகா கும்பமேளா. மொத்தம் 55 நாட்கள் நடக்கும் இந்தக் கும்பமேளாவுக்கு வந்து செல்பவர்களின் எண்ணிக்கை 10 கோடியைத் தாண்டும் என்கிறது புள்ளிவிவரம். தற்போது உலகின் ஒட்டுமொத்தக் கவனத்தையும் ஈர்த்த மகா கும்பமேளாவை, சென்னை ஃபேஷன் டிசைனர் அசோக்குமாரின் அனுபவங்களில் இருந்து:
* "சாதுக்களில் இரண்டு வகை. காவி உடை அணிந்து, ஜடா முடியுடன் ருத்திராட்சம் அணிந்து இருப்பவர்கள். உடை எதுவும் அணியாமல் நிர்வாணமாக இருக்கும் நாக பாபாக்கள். நிர்வாணக் கோலத்தில் இருக்கும் நாக பாபாக்கள், கார், பைக்குகளில் சர்வ சாதாரணமாகப் பறக்கின்றனர். மதுரையைச் சேர்ந்த தமிழர் ஒருவர் நாக பாபாவாக இருக்கிறார்.
* நாக பாபாக்களைப் படம் பிடிக்க, பணம் கொடுக்க வேண்டும். 10 ரூபாய் கொடுத்தால், ஆசிர்வாதம் செய்வதைப் போல போஸ் கொடுத்துவிட்டு, 'இடத்தைக் காலி செய்' என்கிறார்கள். 500 ரூபாய் கொடுத்தால், காலை மடக்கி, கை உயர்த்தி என விதவிதமாக போஸ் கொடுக்கின்றனர். பணம் கொடுக்காவிட்டால், எந்த பாபாவிடமும் போஸும் கிடைக்காது, அருளூம் கிடைக்காது.
* ஒன்றரை அடி உயரமே இருக்கும் ஒரு பாபாவிடம் கூட்டம் அம்முகிறது. அந்தக் குள்ள பாபா யாரிடமும் பேசுவது இல்லை. ஆசிர்வாதம் மட்டுமே. அதுவும் பைசா கொடுத்தால் தான், கை உயர்த்துவார்.
* ஒவ்வொரு சாதுவும் விதவிதமான ஹேர் ஸ்டைலில் மிரட்டுகிறார்கள். மிக நீளமாக முடி வளர்த்து, அதில் வித்தியாசமான அலங்காரங்களைச் செய்துகொள்வதில் அலாதி ஆர்வம்.
* பெண் சாதுக்களையோ, பெண் பாபாக்களையோ அங்கு பார்க்க முடியவில்லை. அதேபோல் கும்பமேளாவில் பெண் பக்தைகளின் வருகையும் மிகவும் சொற்பமே. வெளிநாட்டுப் பெண்கள் ஏகத்துக்கும் தலைகாட்டுகிறார்கள்.
* முட்டித் தள்ளும் கும்பமேளா கூட்டத்திற்கு இடையில் தங்க ரதத்தில் தகதகவென வலம்வருகிறார் நித்தியானந்தா. நாக பாபாக்கள் சிலர் அவரை ஏக்கத்துடன் பார்த்துவிட்டு, தங்களுக்குள் ரகசியமாகக் கிசுகிசுத்துக் கொள்கின்றனர்.
* குளிர்க் கண்ணாடிகள், ஜீன்ஸ் பெண்ட் , டீ ஷர்ட் சகிதமாக ஒரு நாக பாபா ஹாயாக அமர்ந்து இருந்தார். அவரைப் படம் பிடிக்கலாம் என கேமராவை எடுத்தபோது, சட்டென்று கண்ணாடியில் ஆரம்பித்து ஒட்டுமொத்த ஆடைகளையும் சடசடவேன அவிழ்த்துவிட்டு நிர்வாணமாக போஸ் கொடுத்தர்.
* 'முற்றும் துறந்தவர்'களாக இருந்தாலும் நாக பாபாக்கள், தங்களது ஆணுறுப்பயீல் மட்டும் சிறிய கம்பியைச் சுற்றி இருக்கிறார்கள். அந்தக் கம்பியை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாற்றிவிடுவார்களாம்.
--கே.ராஜாதிருவேங்கடம்.
-- ஆனந்த விகடன். 27-2-2013.

No comments:
Post a Comment