"பாம்பன் பாலம் இயற்கையின் மேல் கட்டப்பட்ட பொறியியல் அதிசயம். பாம்பன் தீவில் இருக்கும் ராமேஸ்வரம் நகரத்தை, இந்தியாவுடன் இணைக்கும் இந்தப் பாலத்தின் நீளம், 2.3 கிலோமீஈட்டர். இந்து மகா சமுத்திரத்தில் உள்ள பாக் ஜலசந்தியின் மேல் கட்டப்பட்டுள்ள இந்தப் பாலத்தில், சாலைப் போக்குவரத்து வழியும் ரயில்வே பாதையும் அமைந்துள்ளன. 1914-ல் திறக்கப்பட்ட , இந்தியாவில் முதன்முதலில் கடல் மேல் கட்டப்பட்ட பாலம், 2010 வரை, நம் நாட்டில் கடல் மீது அமைந்துள்ள பாலங்களில் மிக நீளமான பாலமாக விளங்கியது. இப்போது 2-வது இடம். ( முதல் இடம், மும்பை, பாந்த்ரா - வொர்லி பாலம்). மிகப் பெரிய கப்பல்கள் இந்த பாக் நீரிணைப்பைக் கடக்கும்போது, இந்தப் பாலத்தின் நடுவே இருக்கும் லீவர்கள் திறந்து வழிவிடும். 100 ஆண்டுகளுக்கு முன், ஆங்கிலேயர்களின் ஆட்சியின்போது, இந்தியர்களால் கட்டப்பட்ட பாம்பன் பலம், நம் நாட்டுப் பொறியியல் வல்லுனர்களின் பணித் திறமைக்கு சிறந்த உதாரணம்.
-- ஹாசிப்கான். மை டியர் ஜீபா!
-- சுட்டி விகடன். 28-02-2014.
-- இதழ் உதவி : P.K.ஸ்ரீபாலா, பச்சூர், காரைக்கால்.
-- ஹாசிப்கான். மை டியர் ஜீபா!
-- சுட்டி விகடன். 28-02-2014.
-- இதழ் உதவி : P.K.ஸ்ரீபாலா, பச்சூர், காரைக்கால்.
No comments:
Post a Comment