இயற்கையில் கிடைக்கும் பற்றாக்குறையே இல்லாத கிருமிநாசினி, சூரிய ஒளிக்கதிர்கள். இதில், 'அல்ட்ரா வயலெட்' எனப்படும் புற ஊதாக் கதிர்கள் உள்ளன. மனிதன், கால்நடைகள், தாவரங்கள் மீது கிருமிநாசினியாகச் செயல்பட்டு, தீங்கு செய்யும் நுண்ணுயிர்களை அழிக்கின்றன. அதனால்தான் நமது முன்னோர்கள் தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்வதை வாடிக்கையாக வைத்திருந்தார்கள். பின்னால் வந்தவர்களில் பலர், இதை ஏதோ பக்தி விஷயம் என்று மட்டுமே நினைத்து ஒதுக்கிவிட்டார்கள். யோகா பயிற்சிகள் மூலம் இப்போது, சூரிய நமஸ்காரம் செய்யப்படுகிறது. அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் தினமும் காலையில் ஐந்து நிமிடமாவது, மொட்டை மாடியில் கதிரவன் திசையில் கைகூப்பி நிற்கலாமே. சும்மா கிடைக்கும் கிருமிநாசினியை எதுக்கு விடணும்!
-- மு.புவனரட்சாம்பிகை, போடிநாயக்கனூர்.
-- சுட்டி ஸ்டார் நியூஸ் .
-- சுட்டி விகடன். 28-02-2014.
-- இதழ் உதவி : P.K.ஸ்ரீபாலா, பச்சூர், காரைக்கால்.
-- மு.புவனரட்சாம்பிகை, போடிநாயக்கனூர்.
-- சுட்டி ஸ்டார் நியூஸ் .
-- சுட்டி விகடன். 28-02-2014.
-- இதழ் உதவி : P.K.ஸ்ரீபாலா, பச்சூர், காரைக்கால்.
No comments:
Post a Comment